fatty liver drinks :2 வாரங்களில் கல்லீரல் கொழுப்பை குறைக்கும் 8 சூப்பரான பானங்கள்

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாகும். இதை சுற்றி கொழுப்பு அதிக அளவில் படிவதால் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. கல்லீரலில் தேங்கி உள்ள கொழுப்பு படிவங்களை எளிமையாக 2 வாரங்களில் குறைக்க உதவும் இயற்கையான பானங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

8 natural drinks that can reduce liver fat in just 2 weeks

கல்லீரல் (liver) என்பது நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இது உடலில் உள்ள விஷங்களை நீக்கும், கொழுப்பை சீராக பிரிக்கும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் வேலைகளை செய்கிறது. ஆனால் வாழ்க்கை முறை, மாறிய உணவுப் பழக்கங்கள் காரணமாக, பலருக்கு கல்லீரல் கொழுப்பு (fatty liver) பிரச்னை உருவாகி வருகிறது. அதை மாத்திரைகள் இல்லாமலே குறைக்க இயற்கையான வழி இருக்கிறதா? ஆமாம்! சரியான உணவு மற்றும் இயற்கை பானங்கள் மூலம் 2 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். 

தினசரி உணவில் சேர்க்கக்கூடிய 8 சுலபமான இயற்கை பானங்கள்:

Latest Videos

நெல்லிக்காய் சாறு (Amla Juice):

நெல்லிக்காயில் நிறைந்துள்ள வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை சுத்தம் செய்யும். காலையில் வெறும் வயிற்றில் 30ml சாறு , ஒரு கப் தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

எலுமிச்சை தண்ணீர் (Lemon Water)

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் (citric acid) கல்லீரலின் டிடாக்ஸிங்கில் உதவும். தினமும் காலை மற்றும் இரவு சூடான தண்ணீரில் அரை எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. 

புதினா குடிநீர் (Mint Water) :

புதினா நீர் கல்லீரல் சோர்வை குறைத்து, பித்தக் குறைபாடுகளை சமமாக்கும். புதினா இலைகளை நீரில் போட்டு சிறிது நேரம் காய்ச்சி, வடிகட்டி பருகலாம்.

மேலும் படிக்க: தினமும் காலை உப்பு நீர் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கற்றாழை ஜூஸ் (Aloe Vera Juice):

கல்லாழை, கல்லீரலை இயற்கையாக ரீபேர் செய்கிறது. காலையில் மட்டும் ஒரு டேபிள்ஸ்பூன் ஜூஸ்,  வெறும் தண்ணீர்.

அவாரம்பூ குடிநீர் (Avarampoo Herbal Water) : 
இயற்கை ஹெர்பல் டீயான அவாரம்பூ சிறுநீரக வேலைக்கும், கல்லீரலுக்கும் நல்லது. பூவை சிறிது நீரில் நனைத்து, நன்றாகக் காய்ச்சி குடிக்கலாம்.

துளசி இலை தேநீர் (Tulsi Herbal Tea)

துளசி, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்டது. ஒரு கப் தண்ணீரில் 5-6 துளசி இலைகள் வைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டுங்கள்.

சுக்கு-இஞ்சி தேநீர் (Dry Ginger + Fresh Ginger Tea)

இஞ்சி மற்றும் சுக்கு இரண்டும் வாயு, வலி, மற்றும் கல்லீரல் சுகத்திற்கு பங்களிக்கின்றன. ஒரு துண்டு இஞ்சி , சுடுநீர் , வடிகட்டிப் பருகலாம்.

மேலும் படிக்க: தினமும் காலையில் 5 வேப்பிலை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம்

முக்கிய குறிப்புகள் (Quick Tips):

- எந்த பானத்தையும் வீக்கம் அதிகம் இருக்கும்போது குடிக்க வேண்டாம்.
- ஒரு நாளில் 2 வகை பானங்களை மட்டும் குடிக்கலாம்
- அதிகப்படியான உப்பு, எண்ணெய், சாக்லேட், ஆல்கஹால், மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும்.
- 2 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றினால், கல்லீரலில் இருக்கும் கொழுப்பின் அளவு குறையும்.

மருந்துகளுக்கு மாறாக, இயற்கையான பானங்கள் கல்லீரலை சீராக்கி உடலின் சக்தியை மீண்டும் வழங்கும். தினசரி பழக்கத்தில் இவை இருக்க வேண்டியது அவசியம்.

vuukle one pixel image
click me!