பாலியல் செயல்பாடு: இது ஆண்களுக்கான அட்வைஸ்..!!

By Dinesh TG  |  First Published Jan 28, 2023, 2:18 PM IST

பல சந்தர்ப்பங்களில் செக்ஸ்டிங் செய்கையில் தவறுகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இது ஆண்கள் தான் அதிகம் நேருகிறது. இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க, ஆண்கள் செக்ஸ்டிங் செய்யும் போது சில விஷயங்களை தவிர்ப்பது நல்லதாக அமைகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

most typical sex chat errors by men

பரஸ்பர சம்மதத்துடன் செக்ஸ் அரட்டை அல்லது செக்ஸ்ட்டிங் செய்வதில் எந்த தவறும் கிடையாது. பாலியல் தொடர்பாக பேசுகையில், கற்பனையான அம்சங்கள் கொண்டு உரையாடுவது காதலர்கள் அல்லது தம்பதிகளிடையே அன்பை வலுவாக்கும். ஆனால் அதில் சரியான பயன்பாடு, வெளிப்பாடு மற்றும் உண்மை இருப்பது அவசியம். இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் செக்ஸ்டிங் செய்கையில் தவறுகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இது ஆண்கள் தான் அதிகம் நேருகிறது. இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க, ஆண்கள் செக்ஸ்டிங் செய்யும் போது சில விஷயங்களை தவிர்ப்பது நல்லதாக அமைகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆக்ரோஷம் கூடாது

Tap to resize

Latest Videos

undefined

தங்களுடைய துணை அல்லது காதலியுடன் ஆண்கள் பாலியல் சார்ந்த அரட்டைகளை மேற்கொள்ளும் போது, மிகவும் ஆக்ரோஷமாக அல்லது அழுத்தமாக இருக்கிறார்கள். இது அவர்களைச் சார்ந்தோருக்கு சங்கடம் அல்லது அவமரியாதையை ஏற்படுத்துகிறது. தனக்கு வேண்டியது கிடைக்க வேண்டும் என்ற பாணியில் ஆண்கள் பேசுவது பெண்களுடைய மனதை பெரிதும் பாதிக்கிறது. இதனால் வார்த்தைகளை பயன்படுத்தி செக்ஸ் அரட்டை அடிக்கும் போது, அதை உணர்வு சார்ந்து பாருங்கள்.

கவனம் செலுத்துதல் கிடையாது

ஏற்கனவே பாலியல் செயல்பாடுகளின் போது ஆண்கள் யாரும் பெண்களின் பேச்சை கேட்பது கிடையாது என்கிற பொதுவான புகார் கூறப்படுகிறது. ஆனால் அதே புகார் செக்ஸ் சார்ந்த அரட்டையின் போதும் ஏற்படுகிறது. பெண்களின் குறிப்புகள் அல்லது அவர்கள் தரும் சமிக்ஞைகளுக்கு கவனம் செலுத்தாமல், ஆண்கள் தாங்கள் விரும்பியதை மட்டுமே சாட்டின் போது செய்கின்றனர். ஆரம்பத்தில் இது பரஸ்பரமாக தோன்றினாலும், நாட்கள் செல்ல செல்ல உறவில் பிரச்னை உருவாக அதுவே காரணமாகிவிடும்.

திமிர்த்தனம் காட்டுவது

பெண்களுடன் பாலியல் சார்ந்து சாட் செய்கையில் அத்துமீறும் செயலில் ஆண்கள் பலர் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்கள் எல்லை மீறி ஆண்களிடம் பேசுகின்றனர். அதற்கு காரணம் பாலியல் சார்ந்த விஷயங்களில் தனக்கு தான் எல்லாமே தெரியும் என்கிற மனநிலை தான். இதனால் அதிக நம்பிக்கையுடன் பெண்களிடம் அவர்கள் தொடர்ந்து சாட் செய்கின்றனர். இது அவர்களுடைய நடத்தையை பெண்கள் விமர்சிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது. ஆண்கள் மிகவும் திமிர்பிடித்தவர்களாக பெண்கள் கருதிவிடுகின்றனர். இதனால் பெண்களிடம் காதலுடன் பேசுகையில் ஆண்கள் ஜனநாயக போக்குடன் நடந்துகொள்வது உறவை வலிமைப்படுத்தும்.

பிறப்புறுப்பில் இருந்து மீன் போன்று துர்நாற்றம் வீசினால் என்ன அர்த்தம்?

பரஸ்பர மரியாதை தேவை

தங்களுடைய துணை அல்லது மனைவி பேச்சைக் கேட்காமல், அவர்களின் ஆசைகள் அல்லது தேவைகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். மேலும் பாலியல் அரட்டையின் போது அவமரியாதை அல்லது கசப்பான மொழியைப் பயன்படுத்தக்கூடிய குணங்களும் ஆண்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஆண்களுக்கு அவமரியாதையுடன் பேசுவது இயல்பானதாக இருக்கலாம், ஆனால் பெண்ணுக்கு அது உடன்பாடு இல்லாமல் போனால், ஆண்களை அந்த குணத்தை கைவிட வேண்டும். எனவே, நீங்கள் செக்ஸ் அரட்டையில் ஈடுபடும் ஆண்கள் தங்களுடைய மரியாதையையும், தங்களுடைய காதலி அல்லது மனைவி மீதான மரியாதையையும் மதித்து பேச வேண்டும்.

பலவீனங்களுக்கு நேர்மை அவசியம்

காதலி அல்லது வாழ்க்கைத்துணையாகவே இருந்தாலும், அவர்களுக்கு செக்ஸ் அரட்டையில் ஈடுபடுவது பிடிக்கவில்லை என்றால், ஆண்கள் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அதை மாற்ற முயற்சிப்பது பெரும் தவறாகும். ஒருவருடைய எல்லைக்குட்பட்டு மட்டுமே நாம் காதல் பகிர்தலில் ஈடுபட வேண்டும் என்பதை ஆண்கள் நினைவில் கொள்வது முக்கியம். செக்ஸ் அரட்டையின் போது உங்களுடைய துணையின் பலவீனம் குறித்து தெரியவந்தால், அதில் நேர்மையுடன் இருக்க வேண்டும். பெண்களின் எல்லைகளை அறிந்து செயல்படும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் ஆண்கள் செயல்பட வேண்டும்.
 

vuukle one pixel image
click me!