பிறப்புறுப்பில் இருந்து மீன் போன்று துர்நாற்றம் வீசினால் என்ன அர்த்தம்?
பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து லேசான துர்நாற்றம் வீசுவது இயல்பானது மற்றும் இதற்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை. இருப்பினும், ஒரு அருவருப்பான, மீன் மணம் போல நாற்றமடித்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது குக்கியம். இது ஏதேனும் பெரிய உடல்நலப் பாதிப்பின் சுகாதார எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். பல உடல்நலப் பிரச்சினைகள் உங்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். அதன்காரணமாகவே குறிப்பிடத்தக்க அறிகுறி என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக யோனியில் இருந்து மீன் நாற்றம் போல துர்நாற்றம் வீசுவது இயல்பானது கிடையாது.
வஜினிடிஸ்
மீன் போன்ற யோனி துர்நாற்றத்திற்கு மிகவும் பொதுவான காரணம் வஜினிடிஸ் ஆகும். இதை தமிழில் யோனி அழற்சி பாதிப்பு என்று குறிப்பிடலாம். இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு பிறப்புறுப்பில் இருந்து அரிப்பு, வலி போன்ற அறிகுறிகள் தோன்றும். யோனி பாக்டீரியாவின் சமநிலை மாற்றம் அல்லது தொற்று காரணமாக, துர்நாற்றம் வீசுகிறது. மேலும், மாதவிடாய் நிறுத்தம் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்க வழிவகுக்கும். இதுவும் வஜினிடிஸ் காரணமாக ஏற்படலாம். யோனி அழற்சியின் மிகவும் பொதுவான வகைகளில் சிலவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
பி.வி
பாக்டீரியல் வஜினோசிஸ் என்பது இயற்கையாகவே யோனியில் காணப்படும் பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். யோனியின் இயற்கையான சமநிலையில் ஏற்படும் இந்த மாற்றம் வீக்கத்துக்கு வழிவகுக்கிறது. இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு அடிக்கடி வலி, அரிப்பு போன்ற அறிகுறிகள் முதல் தோன்றும். அதையடுத்து பிறப்புறுப்பில் இருந்து மெல்லிய வெள்ளை அல்லது சாம்பல் போன்ற திரவம் வெளியேறும். இதன்மூலம் வலுவான மீன் நாற்றம் போன்ற துர்நாற்றம் வீசும். இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் உடலுறவில் ஈடுபட்டால், அது யோனிப் பகுதியில் எரிச்சலை தரும்.
ட்ரைகோமோனியாசிஸ்
ஒட்டுண்ணியால் ஏற்படும் பொதுவான பாலியல் தொற்று தான்
ட்ரைகோமோனியாசிஸ். இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறப்புறுப்பில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசும். அதுமட்டுமில்லாமல் யோனி பகுதியைச் சுற்றியும் அரிப்பது, சிறுநீர் போகும் போது வலிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னை தோன்றும். உரியமுறையில் சிகிச்சை பெறாவிட்டால், உயிர் போவதற்கான வாய்ப்பும் உள்ளது.
சிகிச்சை முறைகள் என்ன?
உங்கள் நோயறிதலை உறுதிப்படுத்த, நீங்கள் ஒரு மீன் வாசனையுடன் இருக்கும் மற்ற அனைத்து பொதுவான யோனி தொற்று அறிகுறிகளையும் பார்க்க வேண்டும். இதில் சாம்பல் கலந்த வெள்ளை, பச்சை கலந்த மஞ்சள் அல்லது வெள்ளையான திரவங்கள் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும். உடலுறவுக்குப் பிறகு ஒரு மீன் வாசனை அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வை நீங்கள் அனுபவித்தாலும், அதை கண்டறிய வேண்டும். குறிப்பிடப்பட்ட அறிகுறிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், மருத்துவரை அணுகுவது கட்டாயமாகும்.
பரிதாபத்தால் உடலுறவுக் கொள்ளும் பார்டனருடன் வாழ்கிறீர்களா..??
பிரச்னையை தடுப்பது எப்படி?
பாக்டீரியா வஜினோசிஸ் அல்லது ட்ரைக்கோமோனியாசிஸ் எவருக்கும் வரலாம் என்றாலும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களால் அதைத் தடுக்கமுடியும். அதற்கு நல்ல பாலியல் சுகாதாரத்தை கடைபிடிப்பது, மிகவும் இறுக்கமாக இல்லாத பருத்தி உள்ளாடைகளை அணிவது, நிறைய தண்ணீர் குடிப்பது, ஆணுறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிரந்தர தீர்வை தரும்.