சுறா புட்டு என கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் அதிகமானவர்கள் இதை ருசித்திருக்க மாட்டார்கள். கடலோர மீன கிராமங்களில், குறிப்பாக சென்னை, புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபலமான இந்த உணவை சரியான முறையை தெரிந்து கொண்டு வீட்டிலேயே செய்யலாம்.
மீன் பிரியர்களுக்கு சுறா (Shark Fish) என்றாலே உடனே நினைவில் வரும் ஒரு சிறப்பு உணவு , சுறா புட்டு. இது கடலோர கிராமங்களில் மிகவும் பிரபலமான பாரம்பரிய உணவு. சுறா மீனின் மென்மையானTexture மற்றும் எளிதில் உமிழும் தன்மை காரணமாக, இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே அசல் சென்னையில் பிரபலமான சுறா புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுறா புட்டு சிறப்பு :
- மென்மையான சுவை , சுறா மீன் எலும்பில்லாதததால், அனைவரும் எளிதாக சாப்பிடலாம்.
- கொழுப்பு குறைவான, புரதம் நிறைந்த உணவு . ஆரோக்கியமான கடல் உணவு.
- சிறந்த சைட் டிஷ்ஷாக சாதம், சப்பாத்தி, தோசை மற்றும் இடியப்பத்துடன் சூப்பர்!
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு . சுறா மீனில் உள்ள ஒமேகா-3 மற்றும் பொட்டாசியம் பல நோய்களை தடுக்கும்.
- மசாலா அதிகமாக சேர்க்க தேவையில்லை .இயற்கையான சுவை மிஞ்சும் உணவு.
தேவையான பொருட்கள் :
சுறா மீன் – 500 கிராம் (துண்டுகளாக வெட்டியது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
கருவேப்பில்லை – 1 கைப்பிடி
பூண்டு – 6 பல் (நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
மேலும் படிக்க:உணவு அடிபிடித்த பாத்திரங்களை நொடியில் பளபளக்க இப்படி செய்யுங்க...அசந்துடுவீங்க
மசாலா பொடி:
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சில
(இந்த அனைத்தையும் வறுத்து பொடியாக அரைக்கவும்.)
சுறா புட்டு செய்முறை :
- சுறா மீனை நன்றாக கழுவி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- பின்பு, ஒரு பாத்திரத்தில் 1.5 கப் தண்ணீர் ஊற்றி, சுறா மீனை 10-12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- மீன் வெந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்தி, கைவிடாமல் சிறிய துண்டுகளாக பிய்த்து வைத்துக் கொள்ளவும். (எலும்புகள் இருந்தால் நீக்கவும்!)
- கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், அரைத்த மசாலா பொடி சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
- வெந்த சுறா மீனை இந்த மசாலா கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.
- சிறிய தீயில் 5-7 நிமிடங்கள் வறுக்கவும், இதனால் மசாலா நன்றாக ஊறும்.
- இறுதியில், கருவேப்பில்லை தூவி தீயை அணைக்கவும். சுறா புட்டு தயார்!
சுறா புட்டுடன் சிறந்த காம்போ :
- சாதம் மற்றும் பருப்பு ரசம், எளிமையான, ஆனால் சுவையான இணைப்பு!
- சப்பாத்தி மற்றும் தோசை, மசாலா சுறா புட்டு ரொம்ப பொருத்தமாக இருக்கும்.
- இடியப்பம் மற்றும் ஆப்பம் , மென்மையான சுவை, முட்டை சேர்த்து செய்தால் கூடுதல் ருசி.
- பிரியாணிக்கு பக்கத்துல சூப்பர் சைடு டிஷ்!
மேலும் படிக்க:உணவில் உப்பை குறைக்க சொல்லி விட்டாரா டாக்டர்? கவலையை விடுங்க...உப்புக்கு மாற்றாக இந்த பொருட்கள் இருக்கே
சிறப்பு குறிப்புகள் :
- மீனை அதிகமாக வேக வைக்க வேண்டாம், இல்லையெனில் அது உடைந்து போய்விடும்.
- சிறிய தீயில் மட்டும் வறுக்கவும், இதனால் சுவை அதிகரிக்கும்.
- சோம்பு மற்றும் மிளகு சீரகம் சேர்க்க தேவையான அளவில் சேர்க்கவும் . அதிகமாக இருந்தால் வறுப்பு கசக்கி விடும்.
- முட்டை சேர்த்தால் சிறப்பான TEXTURE – முட்டையை இறுதியில் உடைத்து கிளறலாம்.
- நல்லெண்ணெய் பயன்படுத்தினால் அசல் கடலோர உணவு சுவை கிடைக்கும்!