வீட்டில் வழக்கமான முறையில் சாம்பார் செய்து போர் அடித்து விட்டது என்றால் கொஞ்சம் வித்தியாசமாக ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் செய்து பாருங்கள். வீடே மணக்கும். ஒரு முறை இப்படி சாம்பார் செய்து பாருங்கள். உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும்.
ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடும் அந்த முத்தான, மணமும் சுவையும் கலந்த சாம்பார் வீட்டில் ரெடி செய்யலாமா? ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் என்றால், அதன் கனமான தூள்சுவை, நறுமணமான தாளிப்பு, சிறிது இனிப்பு கலந்த புளிப்பு மற்றும் பருப்பு குழைந்த தன்மை என அனைத்தும் சரியாக பேலன்ஸ் ஆக வேண்டும். இதை வீட்டிலேயே செய்யலாம், அதுவும் மிகவும் எளிதாக!
ஹோட்டல் ஸ்டைல் சாம்பாரின் சிறப்புகள்:
- சுவையில் வித்தியாசம். கடைசியில் சேரும் சுகந்தமான எண்ணெய், மஞ்சளும் சிவப்பும் கலந்து வரும் தோற்றம்!
- வெந்தயத்துடன் மிதமான கொத்தமல்லி சுவை
- கடைசி கட்டத்தில் சேரும் சிறப்பு தாளிப்பு சுவையை Level Up செய்யும்.
- நல்லா குழைய வேண்டுமென்றால், சிறப்பான cooking technique தேவை!
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு – 1/2 கப்
முருங்கைக்காய் – 4-5 துண்டுகள்
பெரிய வெங்காயம் – 1 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
கிழங்கு வகைகள் – விருப்பத்திற்கேற்ப
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி , கறிவேப்பிலை – அலங்காரத்திற்காக
மசாலா மற்றும் தூள் வகைகள் :
சாம்பார் தூள் – 2 டேபிள்ஸ்பூன் (ஹோட்டல் ஸ்டைல் திணிக்க வேண்டும்!)
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (அல்லது புளிக்கரைசல் 1/2 கப்)
மேலும் படிக்க:இவங்க மிளகு சாப்பிட்டா பிரச்சனை ஆகிடுமாம்...உண்மை தானா?
தாளிக்க :
நல்லெண்ணெய் (அல்லது) நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு சிட்டிகை
சிவப்பு மிளகாய் – 1
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
-துவரம் பருப்பை நன்றாக கழுவி, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக விடவும்.
- பருப்பு நன்றாக குழைய வேண்டும். ஹோட்டல் சாம்பாரின் முக்கியமான அடிப்படை இது!
- குக்கர் திறந்த பிறகு, பருப்பை நன்றாக கரண்டியால் மென்மையாக மசிக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் மற்றும் பிற காய்களை வேக விடவும்.
- இதனுடன் புளிக்கரைசல், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- மசாலா சேர்ப்பதற்கு இதில் சாம்பார் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து மிதமான சூட்டில் 7–8 நிமிடம் நன்கு கலக்க வேண்டும்.
- அதில் மசித்த பருப்பை சேர்த்து, நன்றாக கலந்து, கொதிக்க விடவும்.
- ஒரு கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிகவும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் விடவும் – அது தான் ஹோட்டல் touch!
- தாளிப்பதற்கு தனியாக ஒரு கடாயில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, கடுகு, உளுந்து பருப்பு, வெந்தயம், பெருங்காயம், சிவப்பு மிளகாய் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
- இதை கொதிக்கும் சாம்பாரில் சேர்த்து, இறுதியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, வாசனை வர விடவும்.
ஹோட்டல் ஸ்டைல் சாம்பாரை சிறக்க முக்கியமான டிப்ஸ் :
- பருப்பு நன்றாக குழைய வேண்டும் . இது தான் ஹோட்டல் சாம்பாரின் பெரும் ரகசியம்.
- கொதிக்க வைக்கும் நேரம் முக்கியம். மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
- தாளிப்பு Final Touch க்கு கடைசி கட்டத்தில் தாளித்தாலே, அதன் வாசனை மற்றும் சுவை முழுமை பெறும்.
- மஞ்சள்தூள் மற்றும் சாம்பார் தூள் அளவு சரியாக இருக்க வேண்டும் . இதுவும் ஹோட்டல் சாம்பாரின் முக்கிய டிப்!
- சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம் . இது சுவையை மொத்தமாக balance செய்யும்.
மேலும் படிக்க:இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்...இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கான இருந்துடாதீங்க
பரிமாறும் முறைகள் :
- சூடாக இருக்கும் சாம்பாரை இட்லி, தோசை, வெங்காய உப்புமா, அவல், மற்றும் அரிசி பதார்த்தங்களோடு பரிமாறலாம்.
- சோறுடன் கலந்து பருகும் போது, மேலே சிறிது நெய் சேர்த்தால், உணவின் சுவை பல மடங்கு அதிகரிக்கும்!
- வழக்கமான சாம்பாரை விட ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் ஆழமான சுவை கொண்டது என்பதால், சாதத்திற்கோ, தோசைக்கோ, குழம்பாக போடுவதற்கோ மிகச் சிறப்பானது.