உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டத்திற்கான 4 சூப்பர் இனிப்பு வகைகள்

பண்டிகை கொண்டாட்டங்கள் என்றாலே இனிப்புடன் கொண்டாடுவது தான் நம்முடைய பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதிலும் தெலுங்கு புத்தாண்டு பிறப்பான உகாதி அல்லது யுகாதி பண்டிகையில் இனிப்பு இல்லாமலா? உகாதி பச்சடி தவிர வேறு என்னென்ன இனிப்புகள் செய்து அசத்தலாம் என்பவர்களுக்கு இதோ சில டிப்ஸ்...
 

4 ugadi special sweet recipes

உகாதி பண்டிகையின் போது, இனிப்பு உணவுகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இவை இனிய தொடக்கத்திற்கும், குடும்ப உறவுகளை மகிழ்ச்சியாக கொண்டாடவும் உதவுகின்றன. இங்கே 4 சிறப்பு உகாதி இனிப்பு வகைகளை வீட்டிலேயே எளிதாக செய்து அசத்தலாம். என்னென்ன இனிப்பு வகைகள் செய்தால் உகாதி கொண்டாட்டத்தை டபுள் டிரீட்டாக ஆக முடியும் என்பதற்கு இதோ சில ஸ்வீட்டான ஐடியாக்கள்.

உகாதிக்கு ஸ்பெஷலான 4 இனிப்புகள் :

Latest Videos

1. பால்கோவா:

பால்கோவா எளிதாக செய்யக் கூடிய ஒரு இனிப்பு வகையாகும். குறைவான பொருட்களை வைத்து, குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிட ஏற்ற உணவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

- அடிகனமான பாத்திரத்தில் பாலை காய்ச்சி, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும்.
- பால் அடர்ந்து அரைப்பட்டு வரும் போது சர்க்கரை சேர்க்கவும்.
- தொடர்ந்து கிளறி, திரண்டு பால்கோவா பதமாக வரும் வரை வேக விடவும்.
- இறுதியாக, நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
- விருப்பப்பட்டால் பாதாம், முந்திரி ஆகியவற்றை பொடியாக நறுக்கியோ அல்லது துருவியோ சேர்க்கலாம். சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.

2. பருப்பு பாயசம் :

சுவையான, ஆரோக்கியமான ஒரு பாரம்பரிய உணவு என்றால் அது பருப்பு பாயசம் தான். நல்ல மணம், மிதமான சுவையுடன் இருக்கும். விழாக்கள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள் ஆகியவற்றின் போது நிறைவாக பரிமாற ஏற்ற உணவாகும்.

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 3/4 கப்
தேங்காய் பால் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - சிறிதளவு

மேலும் படிக்க:கெட்ட கொழுப்புக்களை இயற்கையான முறையில் குறைக்க...இதை டிரை பண்ணுங்க

செய்முறை:

- பாசிப் பருப்பை நெய்யில் வறுத்து, நன்கு குழைவாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
- வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து வடிகட்டி பருப்புடன் சேர்க்கவும்.
- இதை நன்றாக கொதிக்கவிட்டு, தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
- ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து இறுதியாக சேர்த்து பரிமாறவும்.

3. ரவா லட்டு :

சட்டென, ஈஸியாக செய்து விடக் கூடிய உணவுகளில் ரவா லட்டும் ஒன்று. இதை புதிதாக சமைக்க துவங்குபவர்கள் கூட செய்து விடலாம். ஒருமுறை செய்தால் ஒரு வாரம் வரை பாதுகாத்து வைத்து சாப்பிட ஏற்ற ஸ்நாக்காகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ரவா - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - சிறிதளவு
பால் - தேவையான அளவு

செய்முறை:

- ரவாவை பொன்னிறமாக வறுக்கவும்.
- சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மிக்சியில் பொடியாக அரைக்கவும்.
- வறுத்த ரவாவுடன் சர்க்கரையை பொடி செய்து சேர்த்து, முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
- சிறிதளவு பாலை தெளித்து, லட்டு உருட்டி வடிவமைக்கவும்.
- பால் சுவை பிடிக்காதவர்கள், கூடுதலாக நெய் காய்ச்சி ஊற்றி, சூடாக இருக்கும் போதே லட்டு பிடித்து விடலாம்.

மேலும் படிக்க:பகல் உணவிற்கு பின் 10 நிமிடங்கள் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் ?

4. இனிப்பான அரிசி முறுக்கு :

வழக்கமான முறுக்கு என்றால் காரம், உப்பு சுவையில் தான் இருக்கும். ஆனால் வித்தியாசமாக இனிப்பு சுவையில் முறுக்க செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நீர் - தேவையான அளவு

செய்முறை:

- வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
- பச்சரிசி மாவுடன் வெல்ல நீரை சேர்த்து கரைத்து, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
- இதை புட்டு மாவு பதமாக தயார் செய்து, முறுக்கு அச்சில் அழுத்தி வடிக்கவும்.
- மிதமான தீயில், எண்ணெய் நன்கு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

vuukle one pixel image
click me!