செப். 1 முதல் தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயரப்போகிறது; எவ்வளவு தெரியுமா?

First Published | Aug 26, 2024, 12:56 PM IST

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. இந்த உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Toll Plaza

சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு இரண்டு முரை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.

Toll Plaza

மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ரஜினி சொன்னா மட்டும் கோபப்படுவீங்க; உதயநிதி சொன்னா ஏத்துக்குவீங்களா? துரைமுருகனை சீண்டும் நெட்டிசன்கள்

Latest Videos


Toll Plaza

தேர்தல் முடிந்த நிலையில் ஜூன் மாதத்தில் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியது.  இந்த சூழலில் செப்டம்பர் மாதத்திற்கான சுங்கக்கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளது.

Toll Plaza

அதன்படி தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தமிழகத்தில் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை.! என்ன காரணம் தெரியுமா.?

Toll Plaza

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, ஓமலூர், சமயபுரம் உட்ப 25 சுங்கச்சாவடிகளி செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!