கலைஞர் நூற்றாண்டு விழா.. நினைவு நாணயம் பெற்றுக்கொண்ட கமல் - ஸ்டாலினுக்கு புகழாரம்!

First Published | Aug 25, 2024, 9:19 PM IST

Kamal Haasan : கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை முதல்வர் ஸ்டாலினிடம் பெற்றுக்கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

MNM Leader Kamal

உலக நாயகன் கமல்ஹாசன் இப்போது தனது "தக் லைப்" திரைப்பட பணிகளில் மிகவும் பிசியாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் சரிவை சந்தித்த நிலையில், தனது அடுத்த படத்திற்கான பணிகளை மிகவும் கவனமாக மேற்கொண்டு வருகிறார் அவர்.

அழகி போட்டிகளில் கூடவா சாதி பார்க்கணும்? ராகுல் காந்தியை விளாசிய சரத்குமார்!

Chief Minister Stalin

இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியிட்டு விழாவில் கமலால் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் இன்று முதல்வர் ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் சந்தித்து அந்த நினைவு நாணயத்தை உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

Tap to resize

Kamal Haasan

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்ட கமல்ஹாசன் "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை".

CM stalin

"நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்" என்று பதிவிட்டுள்ளார். 

கிருஷ்ணகிரியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; காதலுடன் சிறுமி விபரீத முடிவு

Latest Videos

click me!