அழகி போட்டிகளில் கூடவா சாதி பார்க்கணும்? ராகுல் காந்தியை விளாசிய சரத்குமார்!
Sarathkumar : அரசியல் தலைவரும், நடிகருமான சரத்குமார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் "தலித், பழங்குடியினர் அல்லது ஓபிசி பெண்கள் இல்லாத ஒரு மிஸ் இந்தியா பட்டியலை நான் அண்மையில் பார்த்தேன். சிலர் கிரிக்கெட் அல்லது பாலிவுட் சினிமா பற்றி மட்டுமே பேசுவார்கள். ஆனால் இதுபோன்ற போட்டிகளிலும் ஒரே விஷயம் தான் நடந்து வருகின்றது. ஏன் ஒருமுறை கூட இந்த விஷயங்கள் குறித்து யாருமே பேசுவதில்லை என்று கேள்விகளை எழுப்பினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வண்ணம் பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சரும் அருணாச்சல பிரதேசத்தின் எம்பியுமான திரு ரிஜிஜு, காங்கிரஸ் தலைவர் ராகுல் சில உண்மையைச் சரிபார்க்க வேண்டும், நமது பாரத நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒரு பழங்குடியின பெண் என்பதை அவர் மறக்க வேண்டாம் என்று கூறினார்.
பரபரப்பான சாலையில் ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட யூடியூபர்; லைக்குக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் நிலை
மேலும் பேசிய அவர், அரசு மிஸ் இந்தியாவைத் தேர்ந்தெடுப்பதில்லை, அரசாங்கங்கள் ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை, அரசாங்கங்கள் எந்த ஒரு திரைப்படங்களுக்கு நடிகர்களை, நடிகைகளை தேர்ந்தெடுப்பதில்லை என்பதை ராகுல் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் திரு ரிஜிஜு கூறினார்.
இந்நிலையில் ராகுலின் கருத்துக்கு பதில் கொடுத்துள்ள நடிகர் மற்றும் அரசியல் தலைவர் சரத்குமார் பின்வருமாறு கூறியுள்ளார். "ராகுல் காந்தி அழகிப் போட்டியில் கூட சாதியை சரிபார்ப்பது அவரது அரசியலின் பிளவுத் தன்மையைக் காட்டுகிறது. இது நமது SC, ST, OBC சகோதர, சகோதரிகளுக்கு அவமானம். ராகுல் காந்தி தான் பேசுவது என்னவென்று புரிந்து பேசவேண்டும். அனைவருக்கு சமமான வாய்ப்புகள் கிடைப்பதை தான் நாம் சரிபார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி அரைவேக்காடு தனமான பேச்சு நல்லதல்ல" என்றும் சாடியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 50% பென்ஷனுக்கு கேரண்டி கொடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல்!!