இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடியில் இரண்டு யானைகளும் நடுவில் ஒரு வாகை மரத்தின் பூவும் அமைய பெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த கொடியில் உள்ள யானைகள் ஆப்பிரிக்க யானைகள் என்றும், இந்தியாவில் உள்ள யானைகளுக்கு காதுகள் பெரிதாக இருக்காது என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் ஏன் இந்திய யானைகளை பயன்படுத்தாமல், ஆப்பிரிக்க யானைகள் இதில் இடம்பெற்றுள்ளது என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது.