Sivaraman
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்தி குப்பம் பகுதியில் கிங்ஸ்லி என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சிவராமன் தேசிய மாணவர் படையின் (NSS) பயிற்சியாளராக சிவராமன் இருந்துள்ளார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராகவும் பொறுப்பு வகித்து பின்னர் அதில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Child Abuse
இந்நிலையில் கடந்த 5ம் தேதி என்எஸ்எஸ் மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் கேம்ப் நடைபெறப் போவதாகவும், என்எஸ்எஸ் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலேயே தங்க வேண்டும் என்று சிவராமன் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று 17 மாணவிகள் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் தங்கி உள்ளனர். இதனிடையே கடந்த 9ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் மாணவிகள் தங்கியிருந்த ஆடிட்டோரியத்திற்குள் சென்ற சிவராமன் 12 வயதுடைய மாணவி ஒருவரை தனிமையில் அழைத்துச் சென்றுள்ளார்.
Sivaraman
மேலும் அவரை கடுமையாக தாக்கி, கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து முறையிட்டுள்ளார். மாணவியின் புகாரை பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காமல் மாணவியை மூளைச்சலவை செய்துள்ளார். மேலும் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் உன் பெற்றோர் மிகவும் சிரமப்படுவார்கள். உன் எதிர்காலம் பாதித்துவிடும் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் சிறுமி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார்.
இச்சம்பவம் பள்ளியின் மற்ற ஆசிரியர்களுக்கும் தெரிய வரவே, சிறுமிக்கு பப்பாளி பழம், அன்னாசி பழம் உள்ளிட்டவற்றை சாப்பிடச்சொல்லி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி தனக்கு பள்ளியில் நேர்ந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லியதை கேட்டு மருத்துவர்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
Pocso Act
இதைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வரான சதீஷ்குமார், பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிபர், பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, பயிற்சியாளர்கள் சக்திவேல், சிந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 8 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கைதான சுப்பிரமணி முன்னாள் சி.ஆர்.பி.எப். வீரர். ஆவார். மேலும் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான சிவராமனை கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே முகாமிற்கு சென்ற 17 மாணவிகளில், ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.