நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, அவரது சமீபத்திய மாநாட்டுப் பேச்சுக்கு திமுக அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்து, அவரது அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுகவிற்கு டப் கொடுக்கும் வகையில் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய். இதனையடுத்து தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தி அசத்தினார்.
இந்த மாநாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்த விஜய், முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என கூப்பிட்டு கிண்டல் செய்தார். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
24
விஜய்க்கு சேகர்பாபு பதிலடி
இன்று சென்னை, தீவுத்திடலில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய "கண்காட்சி மையத்தின்" முன்னேற்றப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவரிடம், ஆளும் திமுக மீது விஜய் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு,
இரண்டு மாநாடு முடித்துள்ளார். இப்போது நரியின் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும், ராஜா வேஷம் கலைந்து போச்சு டும் டும் டும் டும் என்பது போல் அனைத்து தரப்பு விமர்சனங்களையும் தாங்கி சென்றுள்ளார். இன்று விஜய் மீது அனைவரும் விமர்சனம் வைக்கும் அளவிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளார்.
34
ராஜா வேஷம் கலைந்து போச்சு
இன்னும் இரண்டு மூன்று மாநாடு நடத்தினால் காலி டப்பா பெருங்காயம் போல் ஆகிவிடுவார். தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் தொடர்பாக மாநாட்டில் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், அவரின் உயரம் அவ்வளவுதான் என தெரிவித்தார். முதலமைச்சரின் புகழ் கொடி இமயத்தின் உச்சி மீது பயந்து கொண்டுள்ளது.
தாயுமானவரான எங்கள் முதலமைச்சர் இன்று கூட பசியறியா சின்ன சிறுசுகள், மழலைகள், மழலை செல்வங்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவு செய்துள்ளார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் இந்த திட்டத்தை உடனடியாக தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் அரசு ஒன்றியத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே அவரது திட்டங்களுக்கு சிறு பிள்ளைதனமாக இப்படி பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு எங்களது நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை.
2026ஆம் ஆண்டு களத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளோம். வரட்டும். இப்படி சிறு பிள்ளை தனமாக பேசுபவரை களத்தில் சந்திப்போம். 200 தொகுதி உறுதி என்பதை கூறி தமிழக முதல்வர் கரங்களில் ஒப்படைப்போம் என தெரிவித்தார்.