பாமக தலைவர் அன்புமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக அரசு தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பாக திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறோம். விடியல் எங்கே? என்று இந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதனை மக்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
24
நிறைவேற்றப்படாத வாக்குறுதியை புத்தகமாக வெளியிட்ட அன்புமணி
தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை வெறும் 66 மட்டுமே. அதே போன்று 66 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதன்படி பார்த்தால் திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் சில மேடைகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்கிறார். மேலும் சில இடங்களில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்கின்றார்.
34
ஒவ்வொரு பக்கமும் உண்மை
நான் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பக்கமும் உண்மை. இதில் பொய்யான தகவல் எதுவும் இல்லை. இது குறித்து விவாதம் நடத்த முதல்வரோ, திமுக.வினரோ வரலாம். நான் தயாராக இருக்கிறேன் என்று கூறி சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில் 2019 நாடாளுமன்ற தேர்தல், அதன் பின்னர் வந்த சட்டமன்ற, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். ஆனால் திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றத்தையே வழங்கி வருகிறது.
புத்தகத்தில் ஈழத்தமிழர் தொடர்பாக 4 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அது நிறைவேற்றப்படவில்லை, லோக் ஆயுக்தா அமைப்பு வலுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று? என திமுக சார்பில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.