TVK தொண்டர்களை உசுப்பேற்றிய ஆதவ் அர்ஜூனா.. அரசுக்கு எதிராக புரட்சி..? கடைசில இப்படி ஆயிடுச்சே..

Published : Sep 30, 2025, 09:56 AM IST

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களின் உணர்ச்சியத் தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த ஆதவ் அர்ஜூனாவின் பதிவு சர்ச்சையை ஏற்படத்தி உள்ளது.

PREV
14
விஜய் கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம்

கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பகல் 12 மணிக்கு விஜய் பிரசார இடத்திற்கு வந்துவிடுவார் என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஆனால் அறிவிப்புக்கு மாறாக மாலை 7 மணிக்கு தான் விஜய் பிரசாரப்பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

24
காதிலேயே வாங்காத புஸ்ஸி ஆனந்த்..?

இதனிடையே அசம்பாவிதம் தொடர்பாக காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்திற்கு சுமார் 10 ஆயிரம் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டுக்கடங்காத அளவில் தொண்டர்கள் குவிந்தனர். இதனை உணர்ந்த காவல் துறையினர் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது. கூட்டத்தில் விஜய் பங்கேற்றால் உயிரிழப்பு உட்பட அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. ஆனால் அதனை ஆனந்த், அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பொருட்படுத்தவில்லை என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

34
வேண்டுமென்றே தாமதப்படுத்திய விஜய்..?

பகல் 12 மணிக்கே விஜய் பிரசார பகுதிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் சேரவேண்டும் என்பதற்காக விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்து சேர்ந்தார். ரோட் ஷோ நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வாகனத்திற்குள் இருந்தவாறே ரோட்ஷோ போன்ற நிகழ்ச்சியை விஜய் நடத்தினார். பல பகுதிகளில் அவர் வேண்டுமென்றே வாகனத்தை நிறுத்தி கால தாமதம் ஏற்படுத்தினார் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அவதூறு பரப்பினால்.. போலீஸ் எச்சரிக்கை

கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பக் கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

44
வரம்பு மீறும் ஆதவ் அர்ஜூனா..?

இதனிடையே காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறும் வகையில் ஆதவ் அர்ஜூனா சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வெளியிட்டப் பதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி.. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.

எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.

அந்த எழுச்சி தான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கருத்து இணையத்தில் வைரலான நிலையில் ஆதவ் அர்ஜூனா அந்தப் பதிவை நீக்கினார்.

Read more Photos on
click me!

Recommended Stories