கோவைக்கு வரும் ஃபெஞ்சல் புயல்; நீலகிரியில் நிலச்சரிவுக்கு வாய்ப்பா? கோவை வெதர்மேன் தகவல்!

Published : Nov 30, 2024, 01:17 PM ISTUpdated : Nov 30, 2024, 03:07 PM IST

ஃபெஞ்சல் புயல்: தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீலகிரி, கோவை மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PREV
14
கோவைக்கு வரும் ஃபெஞ்சல் புயல்; நீலகிரியில் நிலச்சரிவுக்கு வாய்ப்பா? கோவை வெதர்மேன் தகவல்!
Heavy Rain in Tamil Nadu

சென்னை, கடலூர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இது தொடர்பாக கோவை தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக கனமழை (Heavy Rain) பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கள்கிழமை அன்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

24
tamilnadu heavy Rain

புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கோவை நகரின் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது, அச்சப்படத் தேவையில்லை ஆனால் இப்போதிருந்தே நிகழ்வை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது சரியான முன்னெச்சரிக்கையாகும். 

34
tamilnadu heavy Rain

கோயம்புத்தூரில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு புயல் மழை. அதாவது 1977 க்குப் பிறகு முதல் முறையாக நாம் நேரடியாகப் பார்க்கப் போகிறோம். கோயம்புத்தூரை கடக்கும்போது அது வலுவிழந்து இருக்கும் ஆனால் மழை மேகங்கள் உற்பத்தி அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் மழையை விரும்பும் நபர் என்றால் உங்களுக்கு இந்த நிகழ்வு மிகசிறந்த பரவசம் மற்றும் அனுபவத்தை தரும் என்று நம்பலாம்,அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் 

44
heavy rain in tamilnadu

நீலகிரி மக்கள் பாதுகாப்பாக இருங்கள்: ஞாயிறு முதல் செவ்வாய் வரை நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் மிக கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் (Landslide) ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிகழ்விலிருந்து கொங்கு மண்டல மாவட்டங்களின் மற்ற பகுதிகள் பரவலாக கனமழையைக் காணும் என்று வானிலை ஆய்வாளரின் செய்தி குறிப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories