ஆட்டிசம் பாதித்த மகனுக்காக ரிஸ்க் எடுத்த தந்தை: இர்பானின் செயலால் கதறி அழுத மொத்த குடும்பம்

Published : Sep 02, 2024, 06:40 PM IST

ஆட்டிசம் பாதித்த மகனின் மருத்துவ செலவுக்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட நபருக்கு பிரபல யூடியூபர் ரூ.1.05 லட்சத்தை வழங்கி உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
ஆட்டிசம் பாதித்த மகனுக்காக ரிஸ்க் எடுத்த தந்தை: இர்பானின் செயலால் கதறி அழுத மொத்த குடும்பம்
Irfan

கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோத போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதன்படி அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், 4 பிரியாணி சாப்பிடும் நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

24
Food Competition

போட்டியில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்ட நிலையில், ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் கலங்கிய கண்களுடன் சாப்பிடத் தொடங்கினார். அவரை அழைத்து கேட்ட போது, எனது பெயர் கணேச மூர்த்தி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனது மகன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான். வாடகை வாகனம் ஓட்டி பிழைப்பை நடத்தும் எனக்கு எனது மகனின் மருத்துவம் மற்றும் கல்வி செலவை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. 

34
Food Competition

இந்த போட்டியில் வெற்றி பெற்று அதில் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி மகனின் கல்வி மற்றும் மருத்துவ தேவையை சமாளித்துக் கொள்வேன் என்று கூறியதைக் கேட்டு அருகில் இருந்தவர்களின் கண்களும் கலங்கின. இருப்பினும் அந்த போட்டியில் 4 பிரியாணிகளை சாப்பிட்டு இரண்டாம் இடம் பிடித்த கணேச மூா்த்திக்கு ஏற்கனவே அறிவித்தபடி போட்டி ஏற்பாட்டாளர்கள் ரூ.50 ஆயிரம் வழங்கினர்.

44
Youtuber Irfan

இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலான நிலையில் பிரபல யூடியூபர் இர்பான் கணேச மூர்த்திக்கு ரூ.1.05 லட்சத்தை வழங்கி உதவி செய்துள்ளார். தான் மட்டுமல்லாது தன்னைப் போன்றே சக யூடியூபர்களிடமும் நிதி திரட்டி இந்தத் தொகையை அவர் வழங்கி உள்ளார். இர்பான் மற்றும் அவரது நண்பர்கள் அளித்த உதவியால் திகைத்துப் போன கணேச மூர்த்தி குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories