கனமழை எதிரொலி குறிப்பிட்ட தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

First Published | Jul 17, 2024, 11:13 PM IST

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக வால்பாறை தாலுகாவிற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

heavy rain in kerala

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழையும் அவ்வபோது கனமழையும் பெய்து வருகிறது.

heavy rain

அதன்படி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது.

Tap to resize

கோவை மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை எதிரொலியாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Latest Videos

click me!