தமிழக அரசியலில் அதிரடி ஆட்டத்துக்கு தயாரான நடிகர் விஜய்; உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் அன்னதானம்!!

First Published | May 28, 2024, 10:08 AM IST

கோவையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஒரு வேளை உணவு சேவை என்ற திட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை தீவிரபடுத்தி வருகிறார். பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அறிவுறுத்தி வரும் அவர், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும்  ஒருவேளை மதிய உணவு வழங்க வேண்டி  தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டிருந்தார்.

அதன் படி, கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள உழவர் சந்தை பகுதியில், தமிழக வெற்றி கழகம், கோவை தெற்கு  மாவட்ட இளைஞரணியினர், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்கினர்.

Tap to resize

இந்த அன்னதானத்தை தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், காய்கறி வியாபாரிகள், ஓட்டுனர்கள் என ஏராளமானோர் பெற்று சென்றனர். இதே போல, கோவை பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போத்தனூர், வெள்ளலூர், ஏலூர், மதுக்கரை மார்க்கெட், பொள்ளாச்சி, கிணத்துகடவு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தினர் உணவு வழங்கி வருவது குறிப்பிடதக்கது.

Latest Videos

click me!