அதே போன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, INS அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், CRPF மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்போசிஸ் அலுவலகம், பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைப்பெற்றன. இந்த இலவச யோக வகுப்புகளில் எளிமையான, அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோக பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன.