Diwali Special Train
வருகின்ற வியாழன் கிழமை தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் பணியாற்றும் நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்குவார்கள் இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
Diwali Special Train
அந்த வகையில் தலைநகர் சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வருகின்ற 29 மற்றும் நவம்பர் 2ம் தேதி ஆகிய நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தை மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு அடைகிறது.
Diwali Special Train
இதே போன்று மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து வருகின்ற 31, நவம்பர் 4ம் தேதிகளில் அதிகாலை 12.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. இந்த ரயில் ஈரோடு, சேலம், காட்பாடி, திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளர்.
Diwali Special Train
மேலும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலானது, மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகின்ற 29ம் தேி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடைகிறது.
மறு மார்க்கத்தில் வருகின்ற 30ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து பகல் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. இந்த சிறப்பு ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.