திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் தேர்தல் வியூகங்கள் குறித்து கேட்டறியும் அவர், நேற்று அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரப்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பல்வேறு வியூகங்களை வகித்து வருகிறது. அந்த வகையில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் `ஒன் டூ ஒன்' என்ற சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். திமுக மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை முதலமைச்சர் தனித்தனியே சந்தித்து வருகிறார்.
23
முதல்வர் ஸ்டாலின்
இந்த சந்திப்பின் போது பொதுமக்களுக்கு அரசின் சாதனை திட்டங்கள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது? தேர்தல் வியூகம், தொகுதிகளின் செயல்பாடுகள் என்ன? தொகுதி வாரியாக தேர்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது? என்பது குறித்து நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிமுகவின்கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களோடு தனித்தனியாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
33
திமுக நிர்வாகியின் பதவி பறிப்பு
அப்போது திமுக நிர்வாகிகள் கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் மீது புகார் அளித்தனர். அதாவது மகாலிங்கம், திமுகவில் இருந்துகொண்டே, எதிர்க்கட்சியான அதிமுகவினருடன் தொடர்பில் இருப்பதாக வந்த புகாரை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அதிமுகவினருடன் தொடர்பில் இருந்த கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் பதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துள்ளார். அவருக்கு பதிலாக சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக ஆர்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.