கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் நிலை என்ன? அந்த 3 பேர் யார்? கோவை ஆணையர் பரபரப்பு தகவல்

Published : Nov 04, 2025, 10:51 AM IST

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் 7 தனிப்படைகள் தேடி வந்தன. இந்நிலையில், வெள்ளகிணறு பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். 

PREV
14

கோவை விமான நிலையம் அருகே ஞாயிற்று கிழமை இரவு காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

24

தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

34

இந்நிலையில் கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்து வருகிறார். சுட்டுபிடிக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு கொலை திருட்டு வழக்குகள் உள்ளன. சம்பவ இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த மூன்று பேரும் கல்லைக் கொண்டு கார் கண்ணாடியை தாக்கி இளம் பெண்ணை தூக்கி சென்றனர். கைகளில் வைத்திருந்த அரிவாளை கொண்டு ஆண் நண்பரை தாக்கி இளம் பெண்ணை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிடிப்பட்ட மூவரில் காளிஸ்வரன், கருப்புசாமி இருவரும் பிணையில் வெளியில் வந்துள்ள குற்றவாளி என தெரியவந்துள்ளது.

44

சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் மூன்று பேரும் சிக்கி உள்ளனர். பிருந்தாவன நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து பணியில் சென்று அதன் பின்னர் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு 10:30 மணி முதல் 11 மணிக்குள்ளாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. குணா(30), சதீஷ்(20), கார்த்திக்(21) ஆகிய மூன்று பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பிடிப்பட்ட மூன்று பேரும் கூலிப்படையில் தொடர்புடைய நபர்களாக தெரியவில்லை. விசாரணைக்கு பின் தெரிய வர வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் அவருக்கு மனநல கவுன்சிலின் தரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories