சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பூந்தமல்லி–போரூர் வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
24
கோவையில் மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்கள் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருந்து வருவது மட்டுமின்றி மழை, வெள்ள காலங்களிலும் மக்களுக்கு கைகொடுத்து வருகிறது. சென்னையை போன்று தமிழகத்தின் பெரிய நகரங்களான கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கோவையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
34
முதற்கட்டமாக எந்த வழித்தடத்தில் இயக்கம்?
இதில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலாம்பூர் வரையிலும், கோயம்புத்தூர் சந்திப்பு முதல் வாலியம்பாளையம் பிரிவு வரையும் முதலில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கோவை எம்.பி கணபதி பி.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்திற்கான இறுதி விரிவான நிலத் திட்ட அட்டவணையை விரைவில் சமர்ப்பிக்க உள்ளது. முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் இரண்டு வழித்தடங்களின் மொத்த நீளம் 40 கி.மீ ஆகும். இதன் மதிப்பிடப்பட்ட செலவு ₹10,740 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.
கோவையில் மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. முதற்கட்டமாக மெட்ரோ ரயில் இயக்கங்போகும் வழித்தடங்களில் சர்வே பணிகள் நடைபெற உள்ளன என்றும் கோவை எம்.பி கணபதி பி.ராஜ்குமார் கூறியுள்ளார். மேலும் கோவை ரயில் நிலையத்தை போன்று வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் இருந்து ரயில்களை இயக்கும்படி ரயில்வே வாரியத்திடம் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். இரவு நேரங்களில் கோவை-பெங்களூரு எக்ஸ்பிரஸ், கோவை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், கோவை-ஈரோடு மெமு ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.