அதிக முறை தொடர் நாயகன், அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்: சாதனைகளால் அலறவிட்ட அஸ்வின்

Published : Dec 18, 2024, 04:14 PM IST

இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர் படைத்த சாதனைகளை தெரிந்து கொள்வோம்.

PREV
16
அதிக முறை தொடர் நாயகன், அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்: சாதனைகளால் அலறவிட்ட அஸ்வின்
R Ashwin Achievements

தொடர் நாயகன்
சர்வதேச அரங்கில் டெஸ்ட் தொடர்களில் அதிக முறை தொடர் நாயகன் விருதை பெற்ற வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுடன் பகிர்ந்துள்ளார். அதன்படி இரு வீரர்களும் 11 முறை தொடர் நாயகன் விருதை பெற்றுள்ள நிலையில், முத்தையா முரளி தரனைக் காட்டிலும் குறைவான போட்டிகளில் விளையாடி அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார்.

26
R Ashwin Achievements

அதிக விக்கெட் வீழ்த்தியவர்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தமாக 537 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 106 போட்டிகள், 200 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அஸ்வின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரரான அனில் கும்ப்ளே 236 இன்னிங்ஸ்களில் விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். அஸ்வின் இன்னும் சிறிது காலம் விளையாடி கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னதாகவே ஓய்வை அறிவித்துள்ளார்.

தற்போது கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையோடு விடைபெற்றுள்ளார்.

36
R Ashwin Achievements

அதிவேக விக்கெட்டுகள்

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவிற்காக வேகமாக 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். 

46
R Ashwin Achievements

அதிக முறை 5 விக்கெட்
டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசும் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் களம் இறங்குவார்கள். பேட்ஸ்மேன்கள் சதம் அடிப்பது எப்படி மகிழ்ச்சி அளிக்குமோ அதற்கு இணையாக இந்த 5 விக்கெட் சாதனை கருதப்படுகிறது. அந்த வகையில் அஸ்வின் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலிலும் முத்தையா முரளிதரன் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

56
R Ashwin Achievements

5 விக்கெட் + சதம்
ஒரே டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் எடுத்து சதம் அடித்த நான்கு இந்தியர்களில் அஷ்வின் ஒருவர் - மற்றவர்கள் வினு மன்காட், பாலி உம்ரிகர் மற்றும் ஜடேஜா). அஸ்வின் அதை நான்கு முறை செய்துள்ளார், முன்னதாக இயன் போத்தம் ஐந்து முறை 5 விக்கெட் + டெஸ்ட் சதம் கடந்துள்ளார்.

66
R Ashwin Achievements

டெஸ்ட் சதம்
உலகின் முன்னிணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக வலம் வந்த அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், டெஸ்ட் போட்டிகளில் 15 அரை சதம், ஒருநாள் போட்டியில் 1 அரைசதம் கடந்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories