முதல் ஓவரிலேயே தடுமாறும் இந்தியா: 445 என்ற வலுவான நிலையில் ஆஸி. மேட்ச் யார் பக்கம்?
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் இடையிடையே மழை ஆட்டம் காட்டினாலும் போட்டியின் தொடக்கம் முதலே ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கமே ஓங்கி உள்ளது.
முதல் இன்னிங்சில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் 152 ரன்களும், ஸ்மித் 101 ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பும்ரா 6 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 2 பந்துகளை மட்டுமே எதிர் கொண்ட ஜெயஸ்வால் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சுப்மல் கில், விராட் கோலியும் அடுத்தடுத்து 1, 3 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டுமென்றால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும். அல்லது ஆட்டத்தை சமனிலாவது முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஆனால் அதன் பொறுப்பை உணராமல் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.