பஞ்சாயத்து ஓவர்: “பாக்.ல் சாம்பியன்ஸ் டிராபி" இந்தியா, பாகிஸ்தானின் கோரிக்கைகள் ஏற்பு

Published : Dec 14, 2024, 07:41 AM ISTUpdated : Dec 14, 2024, 07:45 AM IST

பாகிஸ்தான் நடத்தும் ஐசிசி.யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

PREV
15
பஞ்சாயத்து ஓவர்: “பாக்.ல் சாம்பியன்ஸ் டிராபி" இந்தியா, பாகிஸ்தானின் கோரிக்கைகள் ஏற்பு
ICC Champions Trophy 2025

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ICC) நடத்தப்படும் முக்கிய தொடர்களில் ஒன்றான சாம்பியன்ஸ் டிராபியை (Champions Trophy) சுழற்சி அடிப்படையில் 2025ம் ஆண்டு தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் நடத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வருகின்ற பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை அட்டவணை வெளியாகாதது தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு தலைவலியாக மாறியுள்ளது. மேலும் இந்த தாமதத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தான் காரணம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

25
ICC Champions Trophy 2025

பாகிஸ்தானில் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்று கூறி மத்திய அரசு வீரர்களை அந்நாட்டுக்கு அனுப்ப தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியில் நடத்த பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கிரிக்கெட் உலகில் இந்திய அணி தவிர்க்க முடியாத சக்தி என்பதால் இந்தியாவின் கோரிக்கையை ஏற்கவேண்டிய கட்டாயம் ஐசிசிக்கு ஏற்பட்டது.

35
ICC Champions Trophy 2025

மேலும் இந்தியாவின் கோரிக்கையை ஐசிசி ஏற்கும் பட்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு ஏற்படும் இழப்பை சரிசெய்ய கூடுதல் நிதி வழங்க வேண்டும், ஐசிசி சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கும் நிதியை கூடுதலாக வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்திற்கும் மேலாக 2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் (T20 World Cup 2026) பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியில் நடத்த வேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டது. இதனிடையே பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா ஐசிசி.யின் தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சூடு பிடித்தது. 

45
ICC Champions Trophy 2025

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் தான் நடைபெறும். ஆனால் இந்திய அணி பங்கற்கும் போட்டிகளை துபாயில் நடத்தலாம். இதற்காக ஏற்படும் கூடுதல் செலவுக்கு ஐசிசி எந்தவகையான இழப்பீடும் தராது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்கும் வகையில் 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக்கோப்பைத் தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதே போன்று 2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

55
ICC Champions Trophy 2025

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நடத்தவுள்ள நிலையில், பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளை இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories