சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும், கேஎல் ராகுலுக்கும் மகாராஷ்டிராவில் உள்ள கண்டாலாவில் சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்னதாகவும், திருமணம் நடந்த பிறகும் நடந்த சடங்கு சம்பிரதாயங்களின் புகைப்படங்களை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!
அதியா ஷெட்டி நலங்கு
அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு முன்னதாக நடந்த நலங்கு வைக்கும் சாஸ்திர சம்பிராதய நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்
திருமண நிகழ்ச்சிக்கு முன்னதாக வருங்கால காதல் கணவர் கேஎல் ராகுலின் மார்பில் சாய்ந்தபடி நகைகள் அணிந்து அதியா ஷெட்டி காணப்பட்டார். கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு முன்னதாக மெஹந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சியும், திருமணத்திற்கு பின்னர் மஞ்சள் பூசும் ஹல்தி விழாவும் சிறப்பாக நடந்துள்ளது.