எனது தோழியை மணந்தது மாயாஜாலமான நாள்: அக்‌ஷர் படேல் டுவீட்!

Published : Jan 28, 2023, 08:12 PM IST

தனது நீண்ட நாள் காதலியை மணந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்டர் படேல், எனது தோழியை மணந்தது மாயாஜாலமான நாள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  

PREV
17
எனது தோழியை மணந்தது மாயாஜாலமான நாள்: அக்‌ஷர் படேல் டுவீட்!
அக்‌ஷர் படேல்

இந்திய கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேல், தனது நீண்ட நாள் தோழியான மேகாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஆண்டு அக்‌ஷர் படேலின் 29ஆவது பிறந்த நாளின் போது திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

27
அக்‌ஷர் படேல் - மேகா

இதையடுத்து, தற்போது நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தொடரில் அக்‌ஷர் படேல் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு திருமணம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

37
அக்‌ஷர் படேல் திருமணம்

கேஎல் ராகுல் கடந்த 23 ஆம் தேதி சுனில் ஷெட்டியின் மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, கடந்த 26ஆம் தேதி நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்‌ஷர் படேல் மற்றும் மேகா இருவரும் குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

47
அக்‌ஷர் படேல் - மேகா திருமணம்

இந்த திருமண நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலங்கள், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த திருமண நிகழ்ச்சியின் போது அக்‌ஷர் படேல் மற்றும் மேகா இருவரும் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளனர்.

57
அக்‌ஷர் படேல் டுவிட்டர்

இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக அக்‌ஷர் படேல் திருமண புகைப்படங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். 

நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட அக்‌ஷர் படேல்: வைரலாகும் புகைப்படங்கள்!

67
மேகா - அக்‌ஷர் படேல் திருமணம்

எனது சிறந்த தோழியை மணந்தேன். அது எங்களது வாழ்க்கையின் மாயாஜாலமான நாள். இதை மேலும் சிறப்பாக்கிய  குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேடையில் குத்தாட்டம் போட்ட அக்‌ஷர் படேல் - மேகா: சோஷியல் மீடியாவையே அதிர வைக்கும் வீடியோஸ்!

77
அக்‌ஷர் படேல் - ஆஸ்திரேலியா டெஸ்ட்

நியூசிலாந்து தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அக்‌ஷர் படேல் இடம் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூரில் நடக்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories