வாஷிங்டன் சுந்தர்
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. நடந்து முடிந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா 3-0 என்று கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.
வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar)
இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தற்போது நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடந்தது. இதில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 177 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது.
வாஷிங்டன் சுந்தர்
ஆரம்பம் முதலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷான் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 3 15 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் 47 ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 21 ரன்களில் வெளியேறினார்.
வாஷிங்டன் சுந்தர் டி20 முதல் அரைசதம்
தீபக் கூடா, ஷிவம் மவி, குல்தீப் யாதவ் என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் சிறந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் டி20 வரலாற்றில் தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 3 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வாஷிங்டன் சுந்தர்
இறுதியாக இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 27 ரன்கள் கொடுத்ததன் மூலமாக அந்த அணி 176 ரன்கள் குவித்தது. இதுவே கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தால், இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றிருக்கலாம். இந்தியா தரப்பில் பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி 22 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
என்னதான் தோல்வி அடைந்திருந்தாலும், இக்கட்டான சூழலில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட வாஷிங்டன் சுந்தருக்கு பலரும் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.