நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட அக்‌ஷர் படேல்: வைரலாகும் புகைப்படங்கள்!

First Published Jan 27, 2023, 11:00 AM IST

இந்திய கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேல் தனது நீண்டநாள் காதலியான மேகாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

அக்‌ஷர் படேல்

குஜராத் மாநிலம் வதோதராவில் இந்திய கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் படேலுக்கும், அவரது நீண்ட நாள் காதலியான மேகாவிற்கும் நேற்று இரவு திருமணம் நடந்தது.
 

அக்‌ஷர் படேல் மேகா திருமணம்

இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் போது அக்‌ஷர் படேல் மேடையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அக்‌ஷர் படேல் திருமணம்

கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் ராஜேஷ்பாய் படேல். உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடியுள்ளார். ரஞ்சி டிராபி, துலிப் டிராபி மற்றும் தியோதர் டிராபி போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.

அக்‌ஷர் படேல் - மேகா திருமண நிச்சயதார்த்தம்

இதையடுத்து கடந்த ஆண்டு அக்‌ஷர் படேலின் 29ஆவது பிறந்தநாளன்று இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 

அக்‌ஷர் படேல் திருமணம்

அக்‌ஷர் படேலின் 29ஆவது பிறந்த நாளான கடந்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி மேகாவை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து அக்‌ஷர் படேல் மற்றும் மேகாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. 

ஒரு நாள் போட்டி

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 தொடரில் அறிமுகமானார்.

டெஸ்ட்

இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஐபிஎல்

இதுதவிர, ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

மேகா அக்‌ஷர் படேல் காதல்

இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்‌ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

நியூசிலாந்து தொடர்

தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர் போட்டிகளில் அக்‌ஷர் படேல் இடம் பெறவில்லை. இந்த நிலையில், நேற்று இரவு அக்‌ஷர் படேலுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்துள்ளது.

click me!