ஒவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்துவருகிறது ஐசிசி. மேலும் ஒட்டுமொத்தமாக அனைத்து ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிய வீரருக்கும் விருது வழங்குகிறது ஐசிசி.
அந்தவகையில், 2022ம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். 2022ம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கு மேல் குவித்த சூர்யகுமார் யாதவ், ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கு மேல் குவித்த 2வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன் முகமது ரிஸ்வான் மட்டுமே ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் அடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டில் சிறப்பாக ஆடியதன் விளைவாக ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
கடின உழைப்பு என்றைக்குமே வீண்போகாது; விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி! ஐசிசி ODI தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம்
இன்று ஐசிசி 2022ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை அறிவித்தது. 2022ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆகிய 2 விருதுகளையும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு வழங்கி கௌரவித்தது ஐசிசி.
2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது இங்கிலாந்து கேப்டனும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கி கௌரவித்தது ஐசிசி. ஜோ ரூட்டுக்கு பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணீன் கேப்டன்சியை ஏற்றார் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்றுள்ளது. பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக அந்த அணியை டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்து வரலாற்று சாதனை படைத்தது இங்கிலாந்து அணி. 2022ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி 870 ரன்களை குவித்தார். பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாது கடந்த ஆண்டில் கேப்டன்சியிலும் அசத்தியதன் விளைவாக, 2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.