ரோஹித் - கில் அபார சதம்.. ஹர்திக் பாண்டியா அதிரடி அரைசதம் அடித்து ஃபினிஷிங்..! நியூசிலாந்துக்கு மெகா இலக்கு

First Published Jan 24, 2023, 5:19 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மா - ஷுப்மன் கில்லின் அபாரமான சதங்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஃபினிஷிங்கால் 50 ஓவரில் 385 ரன்களை குவித்து 386 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.  

நியூசிலாந்து அணி:


ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் லேதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், ஜேகப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.

வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு கேப்டன்கள்..! மௌனம் கலைத்த ராகுல் டிராவிட்

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். 
 

ஒருநாள் கிரிக்கெட்டில் 1100 நாட்களுக்கு பிறகு ரோஹித் சர்மா இந்த போட்டியில் சதமடித்தார். இது ரோஹித்தின் 30வது ஒருநாள் சதமாகும். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்துள்ளார் ரோஹித். 3வது இடத்தை பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார். இன்னுமொரு சதமடித்தால் பாண்டிங்கை முந்திவிடுவார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் 45 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் இருக்கும் நிலையில், 28 சதங்களுடன் 2வது இடத்தை ஜெயசூரியாவுடன் பகிர்ந்துள்ளார். இன்னுமொரு சதமடித்தால் ஜெயசூரியாவின் இந்த சாதனையையும் ரோஹித் முறியடித்துவிடுவார்.

அதிரடியாக பேட்டிங் ஆடிய ரோஹித் சர்மா 83 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் சதமடித்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லும் 74 பந்தில் பந்தில் சதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் கில்லும் இணைந்து 26.1 ஓவரில் 212 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 101 ரன்களுக்கும், கில் 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பெரிய தவறு செய்தும் ஐசிசி தண்டனையிலிருந்து இஷான் கிஷன் தப்பியது எப்படி..?

அதன்பின்னர் கோலி(36), இஷான் கிஷன்(17), சூர்யகுமார் யாதவ்(14) மற்றும் வாஷிங்டன் சுந்தர்(9) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியாவும் ஷர்துல் தாகூரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி சிறப்பாக முடித்து கொடுத்தனர். ஷர்துல் தாகூர் 17 பந்தில் 25 ரன்கள் அடித்தார். மெதுவாக தொடங்கி பின்னர் காட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார். 38 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் அடித்து ஹர்திக் பாண்டியா சிறப்பாக முடித்து கொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 385 ரன்களை குவித்து, 386 ரன்கள் என்ற கடினமான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!