5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் 50 ஓவர் போட்டி: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

First Published Jan 24, 2023, 12:38 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது.

முதல் ஒரு நாள் போட்டி

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே ஹைதராபாத் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

2ஆவது ஒரு நாள் போட்டி

இதையடுத்து ராய்ப்பூரில் நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய பௌலர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதிலேயும் முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதன் மூலம் நியூசிலாந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 

ரோகித் சர்மா

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 11 ரன்னில் வெளியேற சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் இருவரும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். 

சுப்மன் கில்

இறுதியாக இந்தியா 20.1 ஓவர்களின் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. அதுமட்டுமின்றி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

3ஆவது ஒரு நாள் போட்டி - ஒயிட் வாஷ்

இதையடுத்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது. அதுவும், இந்தூரில் 50 ஓவர்கள் போட்டி நடந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்படியிருக்கும் போது இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தென் ஆப்பிரிக்கா டி20

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடியது. டி20 மற்றும் ஒரு நாள் தொடரையும் இந்தியா தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டாஸ் வென்ற இந்தியா பௌலிங் தேர்வு

எனினும், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ரிலி ரோஸோவ் 48 பந்துகளில் 8 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 100 ரன்கள் அடித்து அவுட்டாகமல் இருந்தார். இதில், தென் ஆப்பிரிக்கா 227 ரன்கள் எடுக்க, இந்தியா 178 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தூர்

இந்தூரில் டாஸ் முக்கியம். முதலில் பேட் செய்யும் அணி அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே இந்தப் போட்டியில் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால், இது பேட்டிங் பிட்ச். 

இந்தூர் பேட்டிங் பிட்ச்

முதலில் பேட்டிங் செய்து குறைவான ரன்கள் எடுத்தால், 2ஆவது பேட்டிங் செய்யும் அணி அந்த ரன்னை சேஸிங் செய்து வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.

இந்தியா சேஸிங் வெற்றி

இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் நடந்த ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 290 ரன்களுக்கு மேல் குவித்தது. அதனை இந்தியா எளிதில் சேஸ் செய்து வெற்றி பெற்றது.

விராட் கோலி

இந்திய அணியில் விராட் கோலி தொடர்ந்து சான் ட்னரிடம் சரணடைந்து வருகிறார். அதுமட்டுமின்றி முதல் போட்டியில் 8 ரன்னும், 2ஆவது போட்டியில் 11 ரன்னும் எடுத்து தொடர்ந்து 2 முறையும் சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷான்

சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு பேட்டிங் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், அவர்கள் இருவரும் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.

நியூசிலாந்து

அதே போன்று நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பின் ஆலென், கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தால் மட்டுமே இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும்.

நியூசிலாந்து

ஏற்கனவே இரண்டு ஒரு நாள் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரையும் இழந்த நியூசிலாந்து அதிகளவில் கோபத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தூர் - நியூசிலாந்து

இந்தூர் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் கூட. அப்படியிருக்கும் போது ஒருவேளை நியூசிலாந்து டாஸ் ஜெயித்தால் அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!