மாமனார் பொறுப்பை விட அப்பா பொறுப்பை நான் நன்றாகவே நிறைவேற்றுகிறேன்: சுனில் ஷெட்டி!

First Published | Jan 24, 2023, 10:52 AM IST

மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து அதிகாரப்பூர்வமாக மாமனாரான நடிகர் சுனில் ஷெட்டி தனக்கு அப்பா என்ற உறவுமுறை தான் அதிகமாக பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்

பாலிவுட் நடிகர் சுனில் தனது மகள் அதியா ஷெட்டிக்கு ஆசைப்படி, இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலை திருமணம் செய்து வைத்துள்ளார்.

சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டி திருமணம்

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள தனக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து நேற்று மிக பிரமாண்டமாக அதியா ஷெட்டிக்கும் கேஎல் ராகுலுக்கும் திருமணம் நடந்துள்ளது. 

Tap to resize

சுனில் ஷெட்டி ஆஹான் ஷெட்டி

மகளின் திருமணத்திற்கு வந்திருந்த மீடியா அன்பர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பிறகு நடிகர் சுனில் ஷெட்டி கூறியிருப்பதாவது: நான் இப்போது அதிகாரப்பூர்வமாக மாமனாராகிவிட்டேன். திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

கேஎல் ராகுல் திருமணம்

திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், ஷெட்டியின் குடும்பத்தினர், நண்பர்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். இவர்கள் தவிர ஒரு சில சினிமா பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வருகை தந்திருந்தனர்.

சுனில் ஷெட்டி மாமனார் பொறுப்பு

 ஆனால், மாமனார் என்ற ஒரு பொறுப்பைவிட அப்பா என்ற உறவு தான் மிகவும் நல்லது. ஏனென்றால் இதுவரையில் அந்த பொறுப்பை தான் நான் நன்றாக நிறைவேற்றுகிறேன் என்று கூறியுள்ளார்.

அதியா ஷெட்டி கேஎல் ராகுல் திருமண வரவேற்பு

அதுமட்டுமின்றி அதியா ஷெட்டிக்கும் கேஎல் ராகுலுக்கும் வரும் ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தொடர்

நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள கேஎல் ராகுலுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார். 

ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

மனைவி அதியா ஷெட்டி

இந்தப் போட்டிக்கு புதிதாக திருமணமான கேஎல் ராகுல் தனது மனைவி அதியா ஷெட்டியை அழைத்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சுனில் ஷெட்டியும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டி திருமணம்

அதுமட்டுமின்றி, ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள கேஎல் ராகுலுக்கு, அவரது குடும்பத்தினர் இந்த சீசனில் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேஎல் ராகுல் டுவீட்

காதலியை கரம் பிடித்த கேஎல் ராகுல் திருமணத்திற்கு பிறகு திருமண புகைப்படங்களை பகிர்ந்து தனது முதல் டுவீட்டை பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உங்களது வெளிச்சத்தில் நான் எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன். 

ஒற்றுமை பயணம்

இன்று எங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அது மிகவும் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளித்தது. அன்பும், நன்றியுணர்வும் நிறைந்த இதயத்துடன் இந்த ஒற்றுமைப் பயணத்தில் உங்களது ஆசிர்வாதங்களை தேடுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

அதியா ஷெட்டி இன்ஸ்டாகிராம்

கணவர் எப்படி டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறாரோ அதே போன்று தான் அதியா ஷெட்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!