இந்திய டி20 கிரிக்கெட்டில் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், 2021ல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக ஆடினார். 2021ஐ விட 2022ம் ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
25
2022ம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 31 இன்னிங்ஸ்களில் 1164 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ், 2022ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராவார். டி20 கிரிக்கெட்டில் 2 சதங்களை அடித்துள்ள சூர்யகுமார் யாதவ், ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 177 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 34 பந்தில் 47 ரன்கள் அடித்து 3 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்.
45
இந்த போட்டியில் அடித்த 47 ரன்களுடன் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ், 1625 ரன்களை குவித்துள்ளார். வெறும் 44 இன்னிங்ஸ்களில் இந்த ஸ்கோரை அடித்துள்ள சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி (1617) மற்றும் ரெய்னா(1605) ஆகிய இருபெரும் ஜாம்பவான்களை பின்னுக்குத்தள்ளி 5ம் இடத்தை பிடித்துள்ளார்.