கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் மொத்தமாக 8 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 168 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். கடந்த ஆண்டு அவருடைய சராசரி வெறும் 21 தான். பெரிய அளவில் சோபிக்காத நிலையில் அவரை அணி நிர்வாகம் அணியில் இருந்து விடுவித்தது. இந்நிலையில் தற்போது அவர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.
இன்றைய ஏலத்தில் அவர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்றாலும் இரண்டாவது நாள் ஏலத்தில் அவர் அடிப்படை தொகைக்கு ஏதேனும் ஒரு அணியால் வாங்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.