SRH அணியிடமிருந்து அர்ஷ்தீப் சிங்கை தட்டி பறித்த பஞ்சாப் கிங்ஸ் – 4 கோடியிலிருந்து 18 கோடியான சம்பளம்!
Arshdeep Singh IPL 2025 Mega Auction : ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கை சன்ரைசர்ஸ் ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுத்திருந்த நிலையில் அவரை பஞ்சாப் கிங்ஸ் ரூ.18 கோடிக்கு ஆர்டிஎம் விதி மூலமாக திரும்ப பெற்றுக் கொண்டது.
Arshdeep Singh, IPL 2025 Mega Auction
Arshdeep Singh IPL 2025 Mega Auction : 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் 18ஆவது சீசனுக்கான ஐபிஎல் 2025 தொடரின் மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் தொடங்கியது. இதில் ஐபிஎல் சேர்மன் அருண் தோமல் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மல்லிகா சாகர் இந்த ஏலத்தை நடத்தினார்.
Punjab Kings, IPL 2025, Arshdeep Singh
செட் 1ல் உள்ள மார்க்யூ வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இதில், ஜோஸ் பட்லர், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஷ்ரேயாஸ் மற்றும் கஜிசோ ரபாடா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இன்றைய நாளின் முதல் வீரராக அர்ஷ்தீப் சிங் ஏலம் எடுக்கப்பட்டார். ரூ.2 கோடிக்கு அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான அவரை ஏலத்தில் எடுக்க முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
IPL 2025 Mega Auction, Arshdeep Singh, Punjab Kings
ஒரு கட்டத்தி அவரது ஏலத்தொகை 8 கோடியை கடந்த நிலையில் சிஎஸ்கே ஏலத்திலிருந்து பின் வாங்கியது. அதன் பிறகு குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. கடைசியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அர்ஷ்தீப் சிங்கை ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த நிலையில் தான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு RTM கார்டு பயன்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
IPL 2025 Auction, Arshdeep Singh Rs 18 Crore
கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ரூ.4 கோடிக்கு விளையாடினார். இதுவரையில் 65 ஐபிஎல் போட்டிகளில் இடம் பெற்று விளையாடிய அர்ஷ்தீப் சிங் 76 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.