
IPL 2025 Mega Auction Set 2 Marquee Players List : 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 2 செட்டுகள் முடிந்து 3ஆவது செட் வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு வருகின்றனர். 2ஆவது செட்டில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
செட் 2 மார்கி வீரர்கள்: ஜோஸ் பட்லர், யுஸ்வேந்திர சாஹல், கேஎல் ராகுல், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், முகமது ஷமி..
முகமது ஷமி: IPL 2025 Mega Auction Set 2 Marquee Players
குஜராத் அணிக்காக விளையாடி வந்த முகமது ஷமியை அடிப்படை விலையான ரூ.2 கோடியிலிருந்து ஏலம் எடுக்க சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போட்டி போட்டன. இதில் ஏலத்தொகை 8 கோடியை தாண்ட லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் ஏலம் கேட்க தொடங்கின. இறுதியாக ஹைதராபாத் ரூ.10 கோடிக்கு ஷமியை எடுத்தது. குஜராத் ஆர்டிஎம் பயன்படுத்தவில்லை.
டேவிட் மில்லர்: ரூ.7.50 கோடி - IPL 2025 Mega Auction Set 2 Marquee Players
குஜராத் அணிக்காக விளையாடிய டேவிட் மில்லரை லக்னோ ரூ.7.50 கோடிக்கு வாங்கியது. மில்லரை ஏலம் எடுக்க ஆர்சிபி மற்றும் குஜராத் போட்டி போட்ட நிலையில் கடைசியில் லக்னோ வாங்கியது.
யுஸ்வேந்திர சாஹல்: ரூ.18 கோடி - IPL 2025 Mega Auction Set 2 Marquee Players
ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த சாஹலை அந்த அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை. ரூ.2 கோடி ஏலத்தொகையில் நுழைந்த சாஹலை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் போட்டி போட்டன. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே பின் வாங்க, பஞ்சாப் மற்றும் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. கடைசியில் சாஹலை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது.
முகமது சிராஜ்: IPL 2025 Mega Auction Set 2 Marquee Players
ஆர்சிபிக்காக விளையாடி வந்த முகமது சிராஜை அந்த அணி தக்க வைக்காத நிலையில் ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு ஏலத்தில் நுழைந்தார். வழக்கம் போன்று சிஎஸ்கே போட்டி போட்டு பின் வாங்கிக் கொள்ள, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால், ஆர்சிபி எட்டி கூட பார்க்கவில்லை. இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
2017 முதல் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் சிராஜ், 93 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் மொத்தமாக 93 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த சீசன் வரை ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணியில் இடம் பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியாம் லிவிங்ஸ்டன்: IPL 2025 Mega Auction Set 2 Marquee Players
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த லியாம் லிவிங்ஸ்டன் ரூ.2 கோடி அடிப்படை விலையிலிருந்து ஏலம் கேட்கப்பட்டார். ஆர்சிபி, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவவே, கடைசியாக ஆர்சிபி ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
கேஎல் ராகுல்: IPL 2025 Mega Auction Set 2 Marquee Players
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுலை அந்த அணி தக்க வைக்கவில்லை. இதற்கு கடந்த ஆண்டு நடந்த சம்பவமே காரணமாக சொல்லப்பட்டது. எனினும், அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே ஆர்சிபி, கேகேஆர் மற்றும் டெல்லிக்கு இடையில் போட்டி நிலவியது. இதில், ரூ.14 கோடிக்கு டெல்லி ஏலத்தில் எடுத்தது.
கடந்த சீசனில் ரூ.17 கோடிக்கு லக்னோ அணியில் இடம் பெற்று விளையாடிய ராகுலை 3 கோடி குறைவாகவே டெல்லி ஏலம் எடுத்துள்ளது. 2013 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ராகுல் 132 போட்டிகளில் விளையாடி 4683 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ முதல் சீசனில் எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறியது.
இதே போன்று 2023 சீசனிலும் எலிமினேட்டரில் தோற்று வெளியேறியது. ஆனால், கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 7 தோல்வியும், 7 வெற்றியும் பெற்று 7ஆவது இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.