
Most Expensive Players in IPL 2025 Auction : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. இதில், 210 வெளிநாட்டு வீரர்கள், 367 இந்திய வீரர்கள் உள்பட மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். ஆனால் இந்த ஏலத்தில் மொத்தமாக 207 வீரர்களுக்கு மட்டுமே இடம் பெற வாய்ப்புள்ளது. இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ஆரம்பத்தில் 1,574 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்தனர். இவர்களில் இறுதியில் 577 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் மெகா ஏலத்தை ஐபிஎல் சேர்மன் அருண் சிங் துமல் தொடங்கி வைத்தார். இந்த ஏலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார். செட் 1 மற்றும் செட் 2 மார்க்கி வீரர்கள் இன்றைய ஏலத்தில் முதலில் எடுக்கப்பட்டனர்.
Top 6 Most Expensive Players in IPL History:
செட் 1 மார்கி வீரர்கள்: ஜோஸ் பட்லர், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஷ்ரேயாஸ் மற்றும் கஜிசோ ரபாடா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
செட் 2 மார்கி வீரர்கள்: ஜோஸ் பட்லர், யுஸ்வேந்திர சாஹல், கேஎல் ராகுல், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோ இடம் பெற்றிருந்தனர்.
Top 6 Most Expensive Players in IPL History
செட் 1 மார்கி வீரர்கள் ஏலம்: அர்ஷ்தீப் சிங்
2025 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் முதலில் ஏலம் போனது அர்ஷ்தீப் சிங் தான். அடிப்படை விலையான ரூ. 2 கோடியிலிருந்து ஏலம் தொடங்கியது. சென்னை மற்றும் டெல்லிக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் அவரது ஏலத்தொகை 8 கோடியை கடந்த நிலையில் சிஎஸ்கே ஏலத்திலிருந்து பின் வாங்கியது.
அதன் பிறகு குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. கடைசியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அர்ஷ்தீப் சிங்கை ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த நிலையில் தான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு RTM கார்டு பயன்படுத்தியது, ஹைதராபாத் ரூ.18 கோடிக்கு கேட்க, அதே தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அர்ஷ்தீப் சிங்கை தக்க வைத்துக் கொண்டது.
Top 6 Most Expensive Players in IPL History
கஜிசோ ரபாடா:
தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்தது. அதிலிருந்து ஏலம் எடுக்கப்பட்ட ரபாடாவுக்கு குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் போட்டி போட்டன. கடைசியில் குஜராத் அணி அவரை ரூ.10.75 கோடி கொடுத்து வாங்கியது.
Top 6 Most Expensive Players in IPL History
ஷ்ரேயாஸ் ஐயர்:
நடப்பு சாம்பியன் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் இயருக்கு கடும் போட்டி நிலவியது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் கேகேஆர் அணியே போட்டியில் இறங்கியது. டெல்லி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் போட்டி போட்டன. கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்தார்.
Top 6 Most Expensive Players in IPL History
ஜோஸ் பட்லர்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் ரூ.2 கோடியிலிருந்து ஏலம் எடுக்கப்பட்டார். அவருக்கான ரேஸில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் இறங்கின. இறுதியில் குஜராத் ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. 107 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3582 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 7 சதங்கள், 19 அரைசதங்கள் அடங்கும்.
Top 6 Most Expensive Players in IPL History
மிட்செல் ஸ்டார்க்:
கடந்த சீசனில் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியில் இடம் பெற்று விளையாடியவர் மிட்செல் ஸ்டார்க். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். ஆனால், இந்த சீசனில், மீண்டும் கேகேஆர் ஏலம் எடுக்க போட்டி போட்டது. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Top 6 Most Expensive Players in IPL History
ரிஷப் பண்ட் – ஐபிஎல் வரலாற்று சாதனை:
டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் இருந்த ரிஷப் பண்டை டெல்லி தக்க வைக்கவில்லை. அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சிஎஸ்கே, ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கத்தில் ஆர்சிபி மற்றும் லக்னோ இடையில் போட்டி நிலவியது. அதன் பிறகு சிஎஸ்கே, எஸ் ஆர்ஹெச் அணிகளும் இணைந்தன. கடைசியில் ரூ.20.75 கோடிக்கு லக்னோ வாங்கியது. ஆனால், டெல்லி தங்களிடமிருந்த ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தவே ரிஷப் பண்டின் டிமாண்ட் அதிகரித்தது.
எனினும், லக்னோ பிடிவாதமாக இருந்து ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை தட்டி தூக்கியது. இதற்கு முன்னதாக ஷ்ரேயாஸ் ஐயர் வாங்கியதே அதிகபட்ச தொகையாக இருந்த நிலையில் கொஞ்ச நேரத்திலேயே ரிஷப் பண்ட் அந்த சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
இதுவரையில் டெல்லி அணியில் ரூ.16 கோடிக்கு விளையாடி வந்த பண்ட் இப்போது லக்னோ அணியில் ரூ.27 கோடிக்கு விளையாட இருக்கிறார். 2016 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பண்ட் 117 போட்டிகளில் இடம் பெற்று விளையாடி 3284 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 128 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம், 18 அரைசதங்கள் அடங்கும்.