Ravichandran Ashwin Returns to CSK
2009 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று விளையாடி வருகிறார். 2009 முதல் 2015 வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் ராயல்ஸ் என்று விளையாடினார். இப்போது மீண்டும் 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
IPL 2025 Mega Auction, Ravichandran Ashwin Returns to CSK
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற 577 வீரர்களில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றனர். மேலும், இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 207 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்படுகின்றனர். முதல் 2 செட்களில் முறையே ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். அர்ஷ்தீப் சிங் ரூ.18 கோடிக்கும், கேஎல் ராகுல் ரூ.14 கோடி, முகமது சிராஜ் ரூ.12.25 கோடி, முகமது ஷமி ரூ.10 கோடி என்று வரிசையாக ஏலம் எடுக்கப்பட்டனர்.
Ravichandran Ashwin Join With CSK in IPL 2025 Mega Auction
இதையடுத்து நடந்த 3 மற்றும் 4ஆவது செட்டில் அதிகபட்சமாக ரூ.வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கு கேகேஆர் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த நிலையில் தான் ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் 2025 ஆம் ஆண்டுக்கான தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் காரணமாக ரூ.2 கோடிக்கான அடிப்படை விலையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இடம் பெற்றார்.
Ravichandran Ashwin Returns to CSK
ஆரம்பம் முதலே சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தும் ஆப்ஷன் கூட இல்லாத நிலையில் சிஎஸ்கே அவரை ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின் தன்னுடைய ஹோம் டீமான சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார்.
CSK, IPL 2025, CSK Auction Players
ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான போட்டிகளை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடியிருக்கிறார். சிஎஸ்கேயும் தங்களது போட்டிகளை ஹோம் கிரவுண்டான சேப்பாக்கத்தில் தான் விளையாடும். தற்போது அஸ்வின் சிஎஸ்கேயில் இடம் பெற்றுள்ள நிலையில் சேப்பாக்கத்தில் எல்லோ ஜெர்சியில் அஸ்வினை காணலாம். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பதிரனா ஆகியோர் தக்க வைக்கப்பட்ட நிலையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெற்றுள்ளார்.
IPL 2025 Mega Auction, Ravichandran Ashwin
அதோடு, டெவோன் கான்வே ரூ.6.25 கோடிக்கும், ரச்சின் ரவீந்திரா ரூ.4 கோடிக்கும், ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடிக்கும் இடம் பெற்றுள்ளனர். இதுவரையில் 212 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 180 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கைப் பொறுத்த வரையில் 211 போட்டிகளில் விளையாடி 800 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 50 ரன்கள் அடங்கும்.