உம்ரான் மாலிக் வேகத்தில் பறந்த பெயில்ஸ்: கடைசி டி20ல் இந்தியா வெற்றி, தொடரையும் 2-1 என்று கைப்பற்றியது!

First Published Feb 1, 2023, 10:48 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்று கைப்பற்றியது.
 

நியூசிலாந்து

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி முதல் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், மூன்றிலும் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 


மோசமான சாதனை படைத்த இஷான் கிஷான்: அதுக்கு பிருத்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமா?
 

லக்னோ

இதில், முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து லக்னோ மைதானத்தில் நடந்த 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 1-1 என்று சமன் செய்தது.
 

ரோகித், கோலி சாதனையை முறியடித்து சுப்மன் கில் சாதனை: இந்தியா 234 ரன்கள் குவிப்பு!
 

ஹர்திக் பாண்டியா

இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3ஆவது டி20 போன்று இன்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகம் என்பதால், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். 
 

ராகுல் திரிபாதி

இதையடுத்து, களமிறங்கிய ராகுல் திரிபாதி (44), சூர்யகுமார் யாதவ் (24) மற்றும் ஹர்திக் பாண்டியா (30) ஆகியோர் ஓரளவு ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் இஷான் கிஷான் மட்டும் வரிசையாக தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இஷான் கிஷான்

இந்தப் போட்டியில் இஷான் கிஷான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி 14 டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட அவர் 37 ரன்களை கூட கடக்கவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
 

சூர்யகுமார் யாதவ்

அதுமட்டுமின்றி அவருக்குப் பதிலாக பிருத்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. 
 

சுப்மன் கில்

ஒரு புறம் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 63 பந்துகளில் 7 சிக்சர்கள் 12 பவுண்டரிகள் உள்பட 126 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி, அனைத்து பார்மேட்டுகளிலும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில் இணைந்தார். 
 

விராட் கோலி சாதனை

அதோடு, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும், சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா (118), விராட் கோலி (122) ஆகியோர் அதிக ரன்கள் எடுத்திருந்தனர். 
 

மகள் வாமிகா உடன் டிரக்கிங் சென்ற விராட் கோலி: வைரலாகும் புகைப்படங்கள்!

சுப்மன் கில் நம்பர் 1

இதையடுத்து, கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியில் டேரில் மிட்செல் மட்டுமே அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கையில் எலும்பு முறிவு, காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒரே கையால் ஆடிய ஹனுமா விஹாரி: வைரலாகும் வீடியோ!

சுப்மன் கில் டி20 நம்பர் 1

கிட்டத்தட்ட 150 கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக் மைக்கேல் பிரேஸ்வெல்லின் விக்கெட்டை கைப்பற்றினார். அவரது பந்தில் கிளீன் போல்டானார். பெயில்ஸ் விக்கெட் கீப்பரையும் தாண்டி பறந்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
 

சுப்மன் கில்

இறுதியாக நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்து 168 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதுமட்டுமின்றி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் 1-2 என்ற கணக்கில் நியூசிலாந்து இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சுப்மன் கில்

வேகப்பந்திற்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் பந்து வீச்சு தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 
 

சூர்யகுமார் யாதவ்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேத் நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது. தற்போது ஓய்வில் இருந்த விராட் கோலி நேற்று வரையில் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் வலம் வந்த விராட் கோலி இன்று மனைவியுடன் மும்பை வந்துள்ளார். ஆஸ்திரேலியா அணி தற்போது இந்தியா வந்துள்ளது.

பறந்து பறந்து கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவ்விற்கு குவியும் பாராட்டு: வைரலாகும் வீடியோ!
 

click me!