MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ரோகித், கோலி சாதனையை முறியடித்து சுப்மன் கில் சாதனை: இந்தியா 234 ரன்கள் குவிப்பு!

ரோகித், கோலி சாதனையை முறியடித்து சுப்மன் கில் சாதனை: இந்தியா 234 ரன்கள் குவிப்பு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் இந்திய அணி 234 ரன்கள் குவித்துள்ளது. 

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 01 2023, 09:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
சுப்மன் கில் சதம்

சுப்மன் கில் சதம்

இந்தியாவில் ஒரு நாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
 

211
சுப்மன் கில் சாதனை

சுப்மன் கில் சாதனை

இதையடுத்து லக்னோவில் நடந்த 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார்.
 

311
சுப்மன் கில் நம்பர் 1 இடம்

சுப்மன் கில் நம்பர் 1 இடம்

அதன்படி முதலில் ஆடிய இஷான் கிஷான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினார். 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
 

411
சுப்மன் கில் அனைத்து பார்மேட்டுகளிலும் சதம்

சுப்மன் கில் அனைத்து பார்மேட்டுகளிலும் சதம்

சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா ஓரளவு ரன் சேர்த்தார். அவர், 17 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 103 ரன்கள் வரை சேர்த்துள்ளது.
 

511
சுப்மன் கில் 126 ரன்கள்

சுப்மன் கில் 126 ரன்கள்

ஒருபுறம் வானவேடிக்கை காட்டிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அனைத்து பார்மேட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில்லும் இணைந்துள்ளார்.
 

611
சுப்மன் கில் அதிக ரன்கள் குவிப்பு

சுப்மன் கில் அதிக ரன்கள் குவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார். அவர் 208 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் அனைத்து பார்மேட்டுகளிலும் சதம் அடித்துள்ளனர். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 126 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகமல் களத்தில் உள்ளார்.
 

711
சுப்மன் கில்

சுப்மன் கில்

அவர், 63 பந்துகளில் 7 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் உள்பட 126 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் (122 ரன்கள் நாட் அவுட் - ஆப்கானிஸ்தான் எதிரணி) சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக 118 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

811
சுப்மன் கில்

சுப்மன் கில்

வெறும் 23 வயதில், அனைத்து பார்மேட்டுகளிலும் சதம் அடித்து புதிய வரலாற்று சாதனையை சுப்மன் கில் நிகழ்த்தியுள்ளார்.

இளம் வயதில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் (208).
இளம் வயதில் டி20 போட்டியில் அதிக ரன்கள் (126 ரன்கள் நாட் அவுட்) குவித்த இந்தியர் என்ற சாதனை

911
கிரிக்கெட்டின் இளவரசன்

கிரிக்கெட்டின் இளவரசன்

தொடர்ந்து சாதனை படைத்து சுப்மன் கில்லை, கிரிக்கெட்டின் இளவரசன் என்று பெயரிட்டுள்ளனர். கிரிக்கெட்டின் கடவுள் சச்சின், கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி என்பது அனைவரும் அறிந்தது. அந்த வரிசையில் கிரிக்கெட்டின் இளவரசன் சுப்மன் கில் என்று குறிப்பிட்டுள்ளனர்.

1011
7ஆவது இந்திய வீரர்

7ஆவது இந்திய வீரர்

சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் இந்திய அணி 5ஆவது முறையாக டி20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.  டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த 7ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

 

1111
கோலி சாதனை முறியடிப்பு

கோலி சாதனை முறியடிப்பு

இவ்வளவு ஏன், இந்த ஆண்டில் நடந்த 12 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உள்பட 4 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் விளாசியுள்ளார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி தான் அந்த சாதனையை படைத்திருந்தார். அவர் 122 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
இஷான் கிஷன்
ஷுப்மன் கில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நியூசிலாந்திடம் மண்டியிட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து அவுட்.. பாகிஸ்தானுக்கும் சிக்கல்!
Recommended image2
செமி ஃபைனலுக்கு இந்தியாவுக்குச் சிக்கலா? ஜிம்பாப்வேயை வீழ்த்தினால் மட்டும் போதாது - முழு விவரம்!
Recommended image3
அரையிறுதிக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து! பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - நடக்குமா மிராக்கிள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved