Relationship: உடலுறவின் போது ஏற்படும் மரணம்..என்ன காரணம்..? மருத்துவர்கள் எச்சரிக்கை...

First Published Jul 6, 2022, 11:00 AM IST

Relationship: செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே நேரம் அதிகப்படியான செக்ஸ், கூடவே தவறான வாழ்கை முறையால் இன்றைய வாலிபர்களுக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.

Relationship

நாக்பூரில் அஜய் பார்டெகி என்ற 28 வயது வாலிபர், உடலுறவில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது முதல் தடவை அல்ல, சமீப காலமாக இது போன்ற செய்திகள் அதிகரித்து காணப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஒரு காட்சியில் கூட, சமந்தா ஆண் நண்பருடன் உடலுறவு கொள்ளும் போது திடீரென அவருடைய ஆண் நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

மேலும் படிக்க.....Relationship: பெண்கள் செக்ஸில் வேற லெவல் இன்பம் பெற...காமசூத்ராவில் குறிப்பிட்டுள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா

Relationship

செக்ஸ் மரணங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்:

1. ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் பிரச்சனைக்கு வழி வகுக்கும். இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.

2. உடலுறவில் ஏற்படும் ஆண், பெண் ஆகிய இருவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் உடலுறவு திடீர் மரணங்களுக்கு வலி வகை செய்கிறது. 

3. இது போன்ற சூழ்நிலையில், இதயத்துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் காராணமாக திடீர் மரணங்கள் ஏற்படும்.
 

Image: Getty Images

4. மது அருந்துவதும், புகைப்பிடிப்பது போன்ற செயல்களுக்கு பின்னர், அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின், அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம்.  அதுமட்டுமின்றி, சில நேரம் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது. 

மேலும் படிக்க.....Relationship: பெண்கள் செக்ஸில் வேற லெவல் இன்பம் பெற...காமசூத்ராவில் குறிப்பிட்டுள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா

இது தொடர்பாக, சமீபத்தில் போர்ட்லேண்டில் 4,500 க்கும் மேற்பட்ட மாரடைப்பில் மரணித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், அதில் 34 நபர்கள் மட்டுமே உடலுறவின் போது மாரடைப்பில் மரணம் ஏற்படுத்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இது போன்ற சம்பவம் குறித்து எச்சரித்த மருத்துவர்கள், செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே நேரம் அதிகப்படியான செக்ஸ், கூடவே தவறான வாழ்கை முறையால் இன்றைய வாலிபர்களுக்கு இளம் வயதிலேயே அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அதை, சரி செய்யாவிட்டால், உடலுறவு, கடின உடற்பயிற்சி போன்ற கடினமான வேலைகளில் ஈடுபடும் போது மரணம் கூட ஏற்படும் ஆபத்து உள்ளது என்று கூறுகின்றனர்.

ஆய்வில் உள்ள மற்ற 4,523 நபர்களுடன் ஒப்பிடும்போது, மரணம் அடைந்த இந்த 34 நபர்களும் உடலுறவின் போது மாரடைப்பு ஏற்பட்டிருப்பது குறைந்த அளவிலேயே என்றாலும், சமீப காலமாக அதிகரித்து வரும் இது போன்ற மாரடைப்பு மரணங்களை தவிர்க்க நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம்.

மேலும் படிக்க.....Relationship: பெண்கள் செக்ஸில் வேற லெவல் இன்பம் பெற...காமசூத்ராவில் குறிப்பிட்டுள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா

click me!