ஆய்வில் பங்கேற்றவர்களில், 76 சதவீதம் பேருக்கு மாரடைப்பு அல்லது மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரியவந்துள்ளது. குறைந்தபட்சமாக 23 சதவீதம் பேருக்கு மிதமான இதய நோய் ஆபத்து உள்ளது என்றும் 1 சதவீதம் பேருக்கு அதிக ஆபத்து இருக்கிறது என்றும் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பொது சுகாதார இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், மாநிலத்தில் நூற்றில் ஒருவருக்கு மாரடைப்பு அல்லது மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளது.
தமிழக அரசின் இந்த ஆய்வு திருச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த 1,260 பேரிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 60% பேருக்கு உடல் பருமன் மற்றும் கார்டியோவாஸ்குலர் நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பாதி பேரின் உடலில் கொழுப்பு அளவு அதிகமாக இருந்தது.
ஐந்தில் ஒருவருக்கு பத்து வருடங்களில் உயிருக்கு ஆபத்தான அல்லது உயிருக்கு ஆபத்து இல்லாத மாரடைப்பு அல்லது மூளை பாதிப்பு ஏற்படுவதற்கு மிதமான வாய்ப்பு (23 சதவீதம்) இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வில் வயது, பாலினம், உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மொத்த கொழுப்பு அளவு, எச்.டி.எல் கொழுப்பு, எல்.டி.எல் கொழுப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றைக் கணக்கில் எடுத்து, ஆபத்து கணக்கிடப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 63 சதவீதம் பேர் பெண்கள். அவர்களின் வயது 40 முதல் 44 வரை உள்ளது. 60 சதவீதம் பேர் இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியான உடல் பருமனுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், ஆய்வில் பங்கேற்றவர்களில், 76 சதவீதம் பேருக்கு மாரடைப்பு அல்லது மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரியவந்துள்ளது. குறைந்தபட்சமாக 23 சதவீதம் பேருக்கு மிதமான இதய நோய் ஆபத்து உள்ளது என்றும் 1 சதவீதம் பேருக்கு அதிக ஆபத்து இருக்கிறது என்றும் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் நிகழ்வதற்கான சாத்தியம் கொண்டது ஆகும். இந்த ஆய்வின் முடிவுகள் இந்தியாவிலும் உலக அளவிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.