'ஓட்ஸ் ஊத்தப்பம்' சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் காலை உணவு இது... ரெசிபி இதோ..!

By Kalai Selvi  |  First Published Apr 23, 2024, 7:30 AM IST

இந்தப் பதிவில் ஓட்ஸ் ஊத்தப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிட வேண்டும், எது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று யோசிப்பார்கள். காரணம், அவர்கள் வேறு ஏதாவது சாப்பிட்டால் அவர்களின் உடலில் சர்க்கரை அளவு அபரிமிதமாக அதிகரிக்கும். இது மேலும் அவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே அவர்கள் தங்கள் உணவில் நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை காலை உணவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.  அப்படி என்ன சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லையா..? உங்களுக்கான ஒரு ஸ்பெஷல் டிஸ் தான் 'ஓட்ஸ் ஊத்தப்பம்'. இதற்கான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

இந்த ரெசிபியை நீங்கள் காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. சொல்லபோனால், இந்த ரெசிபி நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, எல்லாருடைய உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.ஒருமுறை நீங்கள் இதை ருசித்தால், அதை விடவேமாட்டீர்கள்.

குழந்தைகளுக்கு நீங்கள் ஏதாவது ஒரு ஸ்பெஷல் டிஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த ரெசிபி உங்களுக்கு சிறந்த தேர்வாகும். மேலும் இது நார்ச்சத்து நிறைந்துள்ளதால், குழந்தைகள் முதல் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வரை என அனைவருக்கும் இந்த உணவு ஏற்றதாகும். இப்போது இந்த ஓட்ஸ் ஊத்தப்பம் எப்படி செய்வது..? இதை செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 2 கப்
கடலை மாவு - 1/2 கப்
தயிர் - 2 கப்
ரவை - 1/2 க்ப
குடைமிளகாய் - 1/4 கப்
முட்டைகோஸ் - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
கேரட் - 1/4 கப்
சீரகம், மிளகு - 1 ஸ்பூன் 
முந்திரிப் பருப்பு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • இந்த ரெசிபி செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது நன்கு சூடானதும் அதில், ரவை மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்  கொள்ளுங்கள். அதன் சூடு ஆறியதும், 
  • அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். 
  • அதுபோல, கடலை மாவை அதேகடாயில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து முட்டைக்கோஸ், குடைமிளகாய், கேரட் ஆகியவற்றை சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது திரித்து வைத்த ரவை, ஓட்ஸ் கலவை மற்றும் கடலை மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய காய்கறிகள், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். 
  • பிறகு மிளகு, சீரகம், முந்திரி  ஆகியவற்றை பொடியாக்கி அதில் சேர்க்கவும். இதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்க வேண்டும்.
  • தோசை மாவு பதத்திற்கு வந்தவுடன், தோசை கல்லில் எண்ணெய் விட்டு, அதன் மேல் இந்த மாவு ஊற்றி ஊத்தப்பம் போல வேகவைத்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான்..இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி..!! இதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சாம்பார் சட்னியுடன் வைத்து சாப்பிடலாம்..
click me!