மோடியின் வெறுப்பு பேச்சு... நாடு முழுவதும் மணிப்பூர் போல மாற்றப்படுமோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது- கனிமொழி

By Ajmal Khan  |  First Published Apr 25, 2024, 8:14 AM IST

இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்  எல்லோருக்கும் இருக்கக் கூடிய உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். 


கலைக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகரித்துள்ளது

நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் தலித் வரலாற்று மாதம் மற்றும் கலைத் திருவிழா 2024 - ன் வேர்க்கோடுகள் ஓவிய விருது 2024 விழா மற்றும் வரைகோடு தலித் கலையும் அழகியலும் ஓவியக் கண்காட்சியும் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் நடைபெற்றது.  இதில் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும் இயக்குனருமான பா.ரஞ்சித் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, நமக்கு தொடர்ந்து சவாலாக இருந்து வருவது அரசியலுக்கும் கலைக்குமான தூரம் அதிகரித்து வருகிறது என்பது தான். பல விஷயங்கள் கீழே உள்ள மக்களிடம் போய் சேராமல் உள்ளது என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

undefined

பாஜக - திமுக கூட்டணியா.? ரொம்ப தப்பு.. அதிமுக, திமுகவை வெளுத்து வாங்கிய வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்

அச்சத்தை ஏற்படுத்தும் மோடியின் பேச்சு

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தொடர்ந்து ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை இழிவுப்படுத்தக்கூடிய வகையிலும் அதே போல காங்கிரஸ் உடைய தேர்தல் அறிக்கை இஸ்லாமியர்களுக்காக கொண்டுவரப்பட்டது என்வும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.  இஸ்லாமியர்கள்  இந்த நாட்டின் குடிமக்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய உரிமைகள் அவர்களுக்கும் உண்டு அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவர்களுக்கு எந்த திட்டத்தையும் கொடுக்கக் கூடாது என்று வெறுப்பை உருவாக்க கூடிய வகையில் பிரதமர்  பேசி வருவது இந்திய நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியு உள்ளது. இப்படிப்பட்ட வெறுப்புணர்வு அவசியமா என்றும் இப்படி அரசியல் லாபத்திற்காக வெறுப்பு  பேச்சை பேசி வருகிறார்கள் என தெரிவித்தார்.

நாடு காப்பாற்றப்பட வேண்டும்

தனக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்பதற்காக கூட அவர் அப்படி பேசியிருக்கலாம். தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் தர மறுத்து வரக்கூடிய சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அங்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்ற கேள்விக்கு கர்நாடகா தமிழ்நாடு என்று பிரச்சினையாக நாம் பார்க்க முடியாது அதை தாண்டி இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும். இந்த வெறுப்பில் இருந்து இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும். கண்டிப்பாக நமக்கு தண்ணீர் வேண்டும் நமக்கும் கர்நாடகாவிற்கும் தண்ணீர் விஷயத்தில் பிரச்சனை இருப்பது உண்மைதான் அதை மறுக்கவில்லை அதை அனைத்தையும் தாண்டி இப்படி ஒரு வெறுப்பு மனதிற்குள் விதைக்கப்படும்போது இந்த நாடு முழுவதும் மணிப்பூர் போல மாற்றப்படுமோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! ஆளுங்கட்சி பிரமுகருக்கு தொடர்பு! இறங்கி அடிக்கும் TTV.தினகரன்!
 

click me!