திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மலையில் நின்று பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது 23). சென்னையில் வெல்டராக பணிபுரிந்து வருகின்றார். இவரும், நெல்லை மாவட்டம் டோனாவூரைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் செல்போனில் பேசிக் கொண்டு காதலை வளர்த்த நிலையில், தேர்தல் முடிந்த மறுநாள் தனது காதலன் ஞானவேலை நெல்லை மாவட்டத்தில் மிகப்பெரிய குடவரை கோவிலான வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட வருமாறு அழைத்துள்ளார்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு சம்பவம்; தலையில் கல்லை போட்டு ஒருவர் கொடூர கொலை
இதைதொடர்ந்து ஞானவேல் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வள்ளியூருக்கு வந்ததோடு காதலியை சந்தித்ததோடு, கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அருகில் உள்ள பொத்தையில் (மலை) பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வந்த மூன்று நபர்கள் காதலர்களை கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர்களது செல்போன், பணம் மற்றும் சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஞானவேல் அருகிலுள்ள வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டியதாக வள்ளியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் கலையரசன், அதே பகுதியைச் சேர்ந்த குட்டி மற்றும் கால்கரையைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் போடும் தொழிலாளி எனவும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.