ரீ ரிலீசாகும் படத்திற்கு வரும் கூட்டம் கூட வாக்களிக்க வருவதில்லை; இயக்குநர் ஹரி வருத்தம்

By Velmurugan s  |  First Published Apr 22, 2024, 10:14 AM IST

முதல்வரையோ, பிரதமரையோ நான் தேர்வு செய்தேன் என்ற மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும் என்று திரைப்பட இயக்குநர் ஹரி கருத்து தெரிவித்துள்ளார்.


நெல்லையில் திரைப்பட இயக்குனர் ஹரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 20 வருடங்கள் கழித்து ரீ ரிலீசான விஜயின் கில்லி திரைப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மக்கள் திரண்டு வரவில்லையே என கேட்டதற்கு, பொதுமக்கள் பெருமளவில் வாக்களிக்க வராதது வருத்தம் அளிக்கிறது. முக்கியமான வேலைகள் இருந்தால் ஓட்டு போட வரவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் எதற்காக சென்று ஓட்டு போட வேண்டும் என நினைத்து பொதுமக்கள் வராமல் இருப்பது சரியல்ல. 

வாக்களிப்பது நமது உரிமை. அந்த ஜனநாயக கடமையை பொதுமக்கள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். என்னுடைய வாக்கினால் நான் எனது முதல்வரையோ, பிரதமரையோ தேர்வு செய்தேன் என்ற மனப்பான்மை வாக்காளர்களுக்கு வர வேண்டும். நீங்கள் வாக்களிக்க வரவில்லை என்றால் டிக்கெட் கிடைக்காமல் திரையரங்கின் வாசலில் நிற்பது போல் ஆகிவிடும். டிக்கெட் கிடைக்காமல் தியேட்டருக்கு வந்தால் வீட்டிற்கு திரும்பி தான் போக நேரிடும். அதேபோல் நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் ஓட்டு போடாத பிரஜையாக தான் சுற்றிக்கொண்டு இருப்பீர்கள்.

Tap to resize

Latest Videos

ஸ்டாலின் வீடு அருகிலேயே வாக்குச்சாவடியை கைப்பற்றிய திமுக... MLA மயிலை வேலு மீது நடவடிக்கை-பாஜக திடீர் கோரிக்கை

தேர்தல் அனைத்து இடங்களிலும் அமைதியாக நடந்தது, முதிய வாக்காளர்களை வாக்குச்சாவடி அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் அழைத்து வந்து அமைதியான முறையில் எளிதாக வாக்களிக்க அனுமதித்ததை தான் பார்த்தேன். இனிமேலாவது மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். அஜித், விஜய் போன்ற பிரபல நட்சத்திரங்கள் தேர்தலின் போது காட்டும் முத்திரைக்காக அவர்களது ரசிகர்கள் காத்திருக்கிறார்களே என்று கேட்ட கேள்விக்கு, மக்கள் அவர்களை சினிமாவிலும் ரசிக்கிறார்கள், நேரிலும் ரசிக்கிறார்கள். 

மதுரை சித்திரை திருவிழா.. விண்ணைப்பிளக்கும் ஹர ஹர சிவா கோஷங்களோடு தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

அதை நான் ஒரு ரசனையாக பார்க்கிறேன். அவர்கள் காட்டும் சைகையினால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்று கூறும் அளவிற்கு எனக்கு அரசியல் அறிவு இல்லை. நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்வதற்காக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முன் காலங்களில் 50 நாட்கள், 100 நாட்கள், 200 நாட்கள் என ஓடிய திரைப்படங்கள் தற்போது பத்து நாட்கள், 20 நாட்கள் ஓடினாலேயே வெற்றி விழா எடுக்கிறார்கள் என கேட்ட கேள்விக்கு, அந்த காலத்தில் மொத்தமே 10 தியேட்டர்களில் தான் திரைப்படங்கள் வெளியாகும். ஆனால் தற்போது ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாவதால் அனைத்து மக்களும் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த திரைப்படத்தை பார்த்து விடுவதாக பதில் அளித்தார். பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடாகவே தான் அதனை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

click me!