ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். புகைப்படங்களை வைத்து பிரசாரம் செய்வேன்; பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விளக்கம்

By Velmurugan sFirst Published Mar 25, 2024, 8:18 PM IST
Highlights

அரசியலில் எனக்கு முகவரி அளித்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவேன் என்று திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக தலைமை மற்றும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களையும், பணிகளையும் செய்துள்ளேன். அந்த மனநிறைவோடு வேட்பாளராக போட்டியிடுகிறேன். 

“காளியம்மாள் எனும் நான்” கெத்தாக மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர்

மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரதமர் யார் என்று கேட்டால் மோடி என்று சொல்கிறார்கள். வல்லரசு நாடாக இந்தியா உருவாக வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டங்களாக இருந்தாலும் திருநெல்வேலி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். 

திருப்பூர் குமரன் சிலைக்கு பட்டையடித்த பாஜக வேட்பாளர்; பாஜகவினரின் செயலால் பரபரப்பு

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது எதையும் செய்யவில்லை. திருநெல்வேலிக்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. என்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் பரப்பரையில் பயன்படுத்துவேன் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியும் தேர்தல் நடத்தும் அதிகாரியான கார்த்திகேயனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

click me!