சிம்லா முத்துச்சோழனுக்குப் பதில் ஜான்சி ராணி! நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்!

By SG Balan  |  First Published Mar 23, 2024, 6:32 PM IST

சிம்லா முத்தச்சோழனுக்குப் பதிலாக ஜான்சி ராணி திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவரும் அண்மையில் தான் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானவர். 


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழனுக்குப் பதிலாக புதிய வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஜான்சி ராணியை புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிம்லா முத்துச்சோழன் சுமார் 20 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றியும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியில் அவருக்கு போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த சிம்லா முத்துச்சோழன் அண்மையில் அதிமுகவில் இணைந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

சமீபத்தில் கட்சியில் இணைந்த அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு சீட் கொடுத்தது குறித்து அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால், அதிமுக சார்பில் நெல்லையில் போட்டியிடும் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்தது.

திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளான சிம்லா முத்துச்சோழன், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் திமுக சார்பில் போட்டியிட்டவர். அவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்றும் எதிர்ப்பு கட்சித் தலைமைக்கு எதிர்ப்பு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சிம்லா முத்தச்சோழனுக்குப் பதிலாக ஜான்சி ராணி திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவரும் அண்மையில் தான் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானவர். 

முன்னாள் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளரான ஜான்சி ராணி மூன்று வாரங்களுக்கு முன்புதான் அதிமுகவில் சேர்ந்தார். இப்போது திமுகவில் திருநெல்வேலி மாவட்டக் கழக இணைச் செயலாளராகவும் திசையன்விளை பேரூராட்சியின் சேர்மன் ஆகவும் இருக்கிறார்.

சம்மர் சேலுக்காக விலையைக் குறைத்த ஸ்கோடா! கோடியாக் காருக்கு செம டிஸ்கவுண்ட் இருக்கு!

click me!